Header Ads



இலங்கைக்கு இவ்வருடம், மேலதிக ஹஜ் கோட்டா இல்லை


சவூதி அரே­பி­யாவில் ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சு கடந்த வரு­டத்தை விடவும் இவ்­வ­ருடம் உல­க­ளா­விய ரீதியில் 5 இலட்­சத்து 40 ஆயிரம் ஹஜ் கோட்டா விநி­யோ­கித்­துள்­ளதால் இலங்­கைக்கு இவ்­வ­ருடம் மேல­திக ஹஜ் கோட்டா கிடைப்­ப­தற்கு வாய்ப்­பில்லை என அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தெரி­வித்தார். 

அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தலை­மை­யி­லான குழு அண்­மையில் சவூதி அரே­பி­யா­வுக்குச் சென்று ஹஜ் விவ­கா­ரங்கள் தொடர்­பாக கிழக்­கா­சிய ஹஜ்  விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாளர் கலா­நிதி ராபித் பத்ரை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யது. 

இந்­தக்­ க­லந்­து­ரை­யா­டலின் போது இலங்­கைக்கு மேல­திக ஹஜ் கோட்டா கோரி­ய­போதே மேல­திக கோட்டா வழங்கும் வாய்ப்பு இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் கூறினார். 

இலங்­கை­யி­லி­ருந்து சென்ற குழு இலங்கை ஹஜ்­மு­க­வர்கள் சவூ­தியில் எதிர்­நோக்கும் சவால்கள், முஅல்லிம் கட்­ட­ணங்கள், மதீ­னாவில் போக்­கு­வ­ரத்து வச­திகள், ஹோட்டல் கட்­ட­ணங்கள் என்­பன தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டி­யது. 

இலங்கை ஹஜ் முக­வர்கள் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் செய்து கொள்ளும் கொடுக்கல் வாங்­கல்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வங்­கிகள் மூலமே மேற்­கொள்­ளப்­ப­ட­ வேண்­டு­மென சவூதி ஹஜ் அதி­கா­ரிகள் இலங்கைக் குழு­வி­ன­ரிடம் தெரி­வித்­தனர். 

அரச ஹஜ்­கு­ழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தலை­மை­யி­லான குழுவில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலிக், ஹஜ்­கு­ழுவின் உறுப்­பி­னரும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சரின் செயலாளர் எம்.எச்.எம்.பாஹிம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



No comments

Powered by Blogger.