Header Ads



இலங்கையில் மோடி - கொழும்பு வரவிருந்த சீன நீர்மூழ்கிக்கு அனுமதி மறுப்பு

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் நீர் மூழ்கிக்கப்பல் ஒன்று நங்கூரமிடுவதற்காக சீனா விடுத்தக்கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.

இந்திய பிரதமர் இலங்கைக்கு இன்று (11) விஜயம் செய்துள்ள நிலையில் இலங்கையின் இரண்டு அதிகாரிகள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ரொயட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது.

சீனாவின் நீர் மூழ்கிக்கப்பல் இறுதியாக 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளது.

இதன்போது இந்தியா தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் கரிசனை காரணமாக சீனாவின் இந்தக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இலங்கையின் அதிகாரிகள் ரொயட்டரிடம் தெரிவித்துள்ளனர்.

இதில், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தமது தகவலில் சீனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எனினும் எதிர்காலத்தில் அதற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் எதிர்வுக்கூறியுள்ளனர்.

எதிர்வரும் 16 ஆம் திகதி சினவின் நீர் மூழ்கிக்கப்பல் இலங்கைக்கு வருவதற்கே அனுமதியை கோரியிருந்தது.

இந்த தகவல் குறித்து இலங்கையில் உள்ள சீன தூதரகத்துடன் தொடர்புக்கொண்டபோது இலங்கையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்துக்கு வரும் 70வீத கப்பல்கள் இந்தியாவில் இருந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.