Header Ads



நள்ளிரவில் நடந்த, அரசியல் பேச்சு..!

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இணைக்கும் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலர் நேற்று இரவு சினமன் கிராண்ட் “சியரஸ் பப்” இல் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மே தின பேரணி நெருக்கடி காரணமாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடல் நள்ளிரவு முதல் விடியும் வரையில் நீண்ட நேரம் நடைபெற்றதாக தெரிய வருகிறது.

இந்த சந்திப்பில் மஹிந்த அமரவீர, சந்திம வீரகொடி, லசந்த அழகியவன்ன மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

4 comments:

  1. மைத்திரியொரு வெலே பால் ஆள் ஒழுங்கா ஆட்சி செய்தால் இப்படியெல்லாம் அலைய தேவையில்லை.

    ReplyDelete
  2. உலகத்தில் பயங்கரவாதிக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்ற பெருமை இந்த அரசாங்கத்தையே சாரும் பொது பல சேனா என்ற பயங்கரவாதிக்கு

    ReplyDelete
  3. My3 has no option than surrendering to Mahinda.

    ReplyDelete
  4. நல்லவன் என்று சொல்றதா , பொன்னையன் என்று சொல்லுறதா?

    ReplyDelete

Powered by Blogger.