Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக, மஹிந்த அணி சதி - அமைச்சர் ஹலீம்

முஸ்லிம்கள் எளிதில் உணர்ச்சி வசப்படும் ஊடக அறிக்கைகளை விடுத்தும், முஸ்லிம்கள் குறித்து பேசியும் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட மஹிந்த அணி துடியாய் துடிப்பதாக அமைச்சர் ஹலீம் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

அமைச்சர் ஹலீம் இதுபற்றி மேலும் கூறுகையில்,

முஸ்லிம்கள் பற்றி மஹிந்த அணிக்கு தீடீர் ஆர்வக் கோளாறு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அவர்கள் முஸ்லிம்கள் பற்றி இப்போது தினமும் பேசுகிறார்கள், கண்ணீர் வடிக்கிறார்கள்.

மஹிந்த அணியின் போலி கண்ணீருக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பது எங்களுக்குப் தெரியும். இலங்கை அரசியலில் தீர்மானமிக்க சக்தியாக உள்ள முஸ்லிம்களின் வாக்குகள் கடந்த 2 பிரதான தேர்தல்களிலும் மஹிந்த அணிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆட்சியை எப்படியேனும் பிடிக்கமுயலும் மஹிந்த அணிக்கு முஸ்லிம்கள் பற்றி பேசி வாக்குகளை சுவீகரித்துக்கொள்ள வேண்டும்.

அதற்காகவே இவர்கள் முஸ்லிம்கள் பற்றி பேசுகிறார்கள், முஸ்லிம்கள் குறித்து அறிக்கை விடுகிறார்கள்.

மேலும் இந்த நல்லாட்சி பேரிச்சம் பழத்திற்கு புதிய வரி விதித்துள்ளதாக போலி பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மை யாதெனில் 2015 ஆம் வருடம் முதலே இந்த பேரீத்தம்பழ வரி விதிக்கப்படுகிறது.

பேரீச்சம்பழ இறக்குமதிக்கு ஆரம்பத்தில்  130 எனும் வரி, ரூபா 70 ஆக குறைக்கப்பட்டு, தற்போது அது ரூபா 60 ஆக விதிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சும் உறுதி செய்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணிலுடன் முஸ்லிம் சமய விவகார அமைச்சராகிய நான் பேசினேன். பிரதமர் முஸ்லிம்கள் விடயத்தில் எந்த பொல்லாப்பும் நடைபெற இடமளிக்க மாட்டேன் என உறுதி வழங்கியதாகவும் அமைச்சர் ஹலீம் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.