Header Ads



அமைச்சர்கள் ஹலீமுக்கும், றிசாத்திற்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் நன்றி தெரிவிப்பு

தேசிய மீலாத் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டுமென்று சில சகோதரர்கள் அமைச்சர் ஹலீமை சந்தித்து கேட்டதற்கிணங்க முல்லைத்தீவு கிளிநொச்சி உட்பட யாழ் மாவட்டத்திலும் இவ்வருட மீலாத் விழாவை நடத்துவதென அமைச்சர் ஹலீம் அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.  இதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீனும் ஒத்துழைப்பு நல்கினார்.

அந்த மீலாத் விழா அபிவிருத்தித் திட்டங்களுக்காக 14 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

அந்தத் தொகையில் 10 மில்லியன் ரூபாய்கள் யுத்தம் வெளியேற்றம் காரணமாக சேதமடைந்த  யாழ் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மிகவிரைவில் இதற்கான நிதி அந்தந்த பள்ளிவாசல்கள் உள்ள இடங்களின் பிரதேச சபைக்கு அனுப்பப்படும். நிதி கிடைத்தவுடன் சேதங்களைத் திருத்தும் வேலைகள், மலசல கூட புனரமைப்பு மீளநிர்மானம் போன்ற வேலைகளை பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் முன்னெடுத்து கட்டிடப் பணிகளை முடிக்க வேண்டுமென முஸ்லிம் கலாச்சார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இவ்வாறான உதவிகளைப் பெறுவதற்கான ஆரம்ப முயற்சிகளை  மேற்கொண்ட டாக்டர் ரம்சி தலைமையிலான குழுவினர், முஸ்லிம் கலாச்சார அமைச்சர், அவரின் பிரத்தியேகச் செயலாளர் அவரின் செயலாளர்கள், கலாச்சார திணைக்களத்தின் செயலாளர், பணிப்பாளர், பணியாளர்கள் போன்றவர்களுக்கும் இந்த முயற்சி வெற்றிபெற பொறுமையுடன் துஆ செய்த அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் வாழ்க்கையில் பரக்கத்தை ஏற்படுத்துவானாக!  ஆமீன்

No comments

Powered by Blogger.