May 28, 2017

அரசாங்கம் ஞானசாரரை கைது, செய்யாமல் இருப்பது வேடிக்கை - அன்வர்

புலிகளின் சர்வதேச நிதி பொறுப்பாளராக இருந்த கே.பி யை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்த இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் இருக்கின்ற பொது பல சேனாவின் பொது செயலாளர் அத்தேகொட  ஞான சாரரை கைது செய்யாமல் இருப்பது வெறுமனே சிறுபான்மை மக்களை ஏமாற்றுகின்ற செயலாகவே பார்க்கமுடிகின்றது 

கடந்த சில மாதங்களாக சிறு பான்மை மக்கள் மீதும் அவரகளது மத கலாச்சாரம்,மதஸ்தலங்கள் தாக்கப்படுவது தொடர்பில் பலரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் தெளிவான ஊடங்கங்களின் வீடியோ காட்சிகளில் பகிரங்கமாக முஸ்லிம்கள்களின் இறைவனான அல்லாஹ்வை நிந்திப்பது தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்தவர்களாக இருக்கின்றனர் 

பகிரங்கமாக இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்துதல் சட்டத்தை கையில் எடுத்தால் நீதிமன்றை அவமதித்தல் போன்ற பல குற்றங்களை புரிந்த ஞான சாரர் கைது செய்யும் படி பொலிஸ் மா அதிபரால் உத்தரவிடப்பட்டும் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது வெறும் வேடிக்கையாக இருப்பது மாத்திரமன்றி சிறுபான்மை மக்களை ஏமாற்றுகின்ற ஒரு நாடகமாகவே பார்க்கமுடியும் 

பொலிஸ் மா அதிபரால் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்த  பின்னரும் பௌத்த கடவுளை தவிர மற்றைய போலி கடவுளை நம்பி ஏமாறவேண்டாம் இயற்கை அனர்த்தத்துக்காக புத்த பெருமானை மாத்திரமே நம்பிக்கை கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக ஊடகங்களுக்கு ஞான சாரர் தெரிவித்திருப்பது மேலும் சிறுபான்மையினரை அவமதிக்கின்ற செயலை செய்யும் இவரை நால்லாட்சி அரசாங்கம் மற்றும் சட்டம் ஏன் மக்களை ஏமாற்றுகின்றது 

தெளிவாக அரசுக்கும் பொலிஸாருக்கும் ஞான சாரர் மறைந்திருக்கும் இடம் தெரிந்தும் இவ்வாறு மாக்களை ஏமாற்றுவது தொடர்பில் சர்வதேச சமூகமும் கண்காணிப்பதை நல்லாட்சி அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் 

நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட டான் பிரசாத்தும் சட்டத்தை மதிக்காமல் முஸ்லிகளுக்குக்கு வார்த்தைகளால் தாக்குவது தொடர்பிலும் ஏன் இன்னும்  நடவடிக்கை எடுக்கவில்லை இவ்வாறு ஒவ்வொரு தனிமனிதனும் அமைப்பொன்றை உருவாக்கி இன்னுமொரு சமூகத்தை நிந்திக்கின்றவர்களாக உருவாக்க நல்லாட்சி அரசாங்கம் வழிவகுக்குமா இல்லை இனவாத செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி கட்டுப்படுத்துமா என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் தனது அறிக்கைகையில் கேள்வி எழுப்பி உள்ளார்

4 கருத்துரைகள்:

நல்லாட்சியில் சம்பிக்க ரணவக்க, மற்றும் விஜேதாச ராஜபக்ஷ இருக்கும் வரைக்கும் எதுவுமே நடக்காது. இதுக்கு ஒரே வலி எங்களது பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுதான்.


"THE MUSLIM VOICE" STATES THAT IF THESE FELLOWS HAVE THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS LIKE CHAMPIKA RANAWAKA AND WIJEYDASA RAJAPAKSA, THE PM AND PRESIDENT MAITHRIPALA SIRISENA, THEY SHOULD RESIGN THEIR MINISTER, DEPUTY MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION AS A SEPARATE GROUP OF 21 MUSLIM MP's, INSHA ALLAH. MUSLIM PROVINCIAL COUNCIL MEMBERS SHOULD DO THE SAME, Insha Allah, WITHOUT GIVING PRESS STATEMENTS.
Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for there personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
Noor Nizam - Convener "The Muslim Voice".

MR. NIZAM YOU DID NOT SAY THIS WHEN WORST THINGS HAPPENED DURING MAHINDA RAJAPAKSE'S REGIME. IS IT BECAUSE YOU WERE GIVEN A SPECIAL POST BY MR. IF YOU GET ONE NOW YOU MIGHT CHANGE YOUR POSITION. DO NOT TRY TO BE A BOGUS CHAMPIONS OF THE MUSLIMS.

Post a Comment