Header Ads



ராஜிதவை விலக்குங்கள் என்கின்றனர் அமைச்சர்கள் - எப்படி முடியும் என்கிறார் ராஜித..?

தாமும் மேலும் சிலருமே இணைந்தே நடைமுறை அரசாங்கத்தை உருவாக்க உதவியளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன எவ்வாறு தம்மை அமைச்சரவை பேச்சாளர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரமுடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை தான் இரட்டை நிலைப்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்றும், இரட்டை நிலைப்பாடுகளை நம்பவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சரத் பொன்சேகா தொடர்பாக அமைச்சரவையில் பேசப்பட்ட விடயத்தை ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடனேயே வெளியிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2

அமைச்சர் ராஜித சேனாரத்னவை அமைச்சரவை பேச்சாளர் நிலையில் இருந்து அகற்றவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலர் இன்று ஜனாதிபதியிடம் கோரவுள்ளனர்

அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவை அமைச்சரவை பேச்சாளராக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வீட்டில் இடம்பெற்ற சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சர்கள், ஜோன் செனவிரட்ன, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு இராணுவம் தொடர்பான அமைச்சு வழங்கப்படப்போவதாக ராஜித சேனாரத்ன தெரிவித்த தகவல் தொடர்பிலேயே இந்த மோதல்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. John, Daya, Nimal, Dilan...all of them were in Mahinda group just jumped here like monkeys
    Now they want to judge the yahapaalanaya..!!!

    ReplyDelete

Powered by Blogger.