Header Ads



தேர்தலில் போட்டியிட, உள்ளவர்களின் கவனத்திற்கு..!

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச சேவையில் இருந்து விலகிக் கொள்வோர் மீண்டும் அதே பதவியைப் பெற முடியாது என்று பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பொதுநிர்வாக அமைச்சின் செயலர் ஜே.ஜே. ரத்னசிறி தகவல் வெளியிடுகையில், தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் மீண்டும் அரச சேவையில் அதே பதவியில் அமர்ந்து கொள்ளும் மோசமான நடைமுறையைத் தடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

எனினும், தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகி, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர் அவர்கள் வேறொரு அரச நிறுவனத்தில் இணைந்து கொள்ள முடியும். ஆனால் முன்னர் வகித்த பதவியைப் பெற முடியாது.

அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதையடுத்து, இதுதொடர்பான சுற்றறிக்கை அரச பணியகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அரச பணியாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், அரச சேவையில் இருந்து விலகி, வேட்பாளர்களாக போட்டியிடுவது வழக்கம்.

எனினும், வெற்றி பெற முடியாத வேட்பாளர்கள் மீண்டும் அமைச்சுக்கு விண்ணப்பித்து, தமது முன்னைய பதவியைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது. அந்த நடைமுறையே தற்போது மாற்றப்பட்டுள்ளது.

1 comment:

  1. இதேபோன்று, தேர்தலில் போட்டியிட உள்ள முஸ்லிம் வேட்பாளர்களுக்கான ஓர் பயிற்சியையோ அல்லது அறிவுரைகளையோ உலமா சபையால் வழங்குவது ஏற்புடையதாகும்.

    பொருட்களுக்கு ஹலால் அத்தாட்சிப்பத்திரம் வழங்குவது போன்று, பயிற்சியளிக்கப்பட்டு, அத்தாட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர்கள் களமிறங்குவது முஸ்லிம் மற்றும் இதர  வாக்காளர்கள் சரியான தெரிவை மேற்கொள்ள பேருதவியாயிருக்கும்.

    இதனால் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடிவதோடு, ஒற்றுமையையும் பலப்படுத்தலாம்.

    ReplyDelete

Powered by Blogger.