Header Ads



மத - இன பாதிப்பை ஏற்படுத்தும், சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர்

தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார். 

பிரதேசங்களில் சட்டம், அமைதியை உரிய முறையில் பேணுவதோடு, மத, வர்க்க மற்றும் இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் சீ.டி.விக்ரமரத்ன கூறியுள்ளார். 

மேலும், இது போன்ற சம்பவங்கள் ஏற்படின் சட்டத்தை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்துமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், அவ்வாறு சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தாத பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் சில, அண்மைக் காலங்களாக பல இடங்களில் பதிவாகியுள்ளதாகவும், இது போன்ற செயற்பாடுகள் மீள ஏற்படாது இருக்க பதில் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பிரியந்த ஜெயக்கொடி மேலும் கூறியுள்ளார். 

1 comment:

  1. Who trust Sri Lankan police law and order they support only for Buddhist people...they don't protect minority peoples in Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.