Header Ads



கத்தாரில் இலகுவாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான செயலமர்வு

இன்றைய நவீன உலகிலே நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒரு தலையாய பிரச்சனை தான் சிறந்ததொரு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதாகும். சில போது நல்ல திறமையும், ஆற்றலும் இருந்த போதிலும் தனது தகுதிக்கு ஏற்றவாறு; பொருத்தமான தொழிலினை பெற்றுக்கொள்ள பலர் தவறிவிடுகின்றனர். இன்னும் சிலர் நேர்முகப்பரீட்சைக்காக தன்னைத் தயார்ப்படுத்த தெரியாது தவிக்கின்றனர். இன்னும் சிலர் தான் முகங்கொடுக்கக்கூடிய நேர்முகப்பரீட்சைகளுக்கு தனது சுயகோர்வையினை மிகப்பொருத்தமானதாக தயார்படுத்த தவறிவிடுகின்றனர். இதுபோன்ற இன்னோரன்ன காரணங்களினால் பல சந்தர்ப்பங்கள் எம்மை விட்டும் நழுவிப் போய்க்கொண்டிருக்கின்றன. 

இத்தகைய மிக முக்கியமான சவால்களை, பிரச்சனைகளை, தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில்/ இவற்றுக்கான மிகப்பொருத்தமான வழிகாட்டல்களை வழங்கும் நோக்குடன் மிகச்சிறந்த, நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்களைக்கொண்டு கத்தார் மண்ணிலே எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19 ம் திகதி) பகல் 2 மணிமுதல் 5 மணிவரையிலான ஒரு செயலமர்வினை SLMPQ ஏற்பாடு செய்திருக்கின்றது.

இம்மகத்தான அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இன்றே நீங்களும், உங்கள் சக தோழர்களுக்கும் இது பற்றிய தகவலை அறியச்செய்து பதிவுகளுக்கும், மேலதிகமாக தகவல்களுக்கும் இன்றே தொடர்புகொள்ளுங்கள்.

*55497421 / 55779488*

இடம் : Phoenix Private School, Salwa Road. (Beside Teyseer Petrol station)

ஏற்பாடு: SLMPQ*

Jazakkallah


No comments

Powered by Blogger.