Header Ads



கீதாவிற்கு கொஞ்சம் நேரம் நிம்மதி

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை எதிர்வரும் 15ம் திகதி வரை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கீதா குமாரசிங்க உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க, இரட்டைப் குடியுரிமை விவகாரம் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

மேலும், எதிர்வரும் 15 ஆம் திகதியன்று கீதாவின் மனு மீதான விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.