Header Ads



'முஸ்லிம்களுக்கு உள்ள ஒரேயொரு வழிமுறை, சர்வதேச உதவியை நாடுவது மாத்திரமே'

-Tm-

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய  தேவைப்பாடு எழுந்துள்ளது எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்தபோது,'

தற்போது முஸ்லிம்களுக்கு உள்ள ஒரேயொரு வழிமுறை சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவது மாத்திரமே எனத் தெரிவித்த அவர், இலங்கையிலுள்ள அனைத்து சர்வதேச தூதுவராலய உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் தமது பிரச்சினைகளை முஸ்லிம்கள் முன்வைக்க முடியும்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும்; செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு, அரபு லீக் ஆகியவற்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இனவாதச் செயற்பாடுகள், அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

'கடந்த ஆட்சிக்காலத்தில் பொது பல சேனா அமைப்பானது முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் அவர்களின்  இத்தகைய அடாவடித்தனமான செயற்பாடுகளை நிறுத்துவதற்கோ அல்லது தட்டிக்கேட்பதற்கோ அந்த அரசாங்கம் முன்வரவில்லை  என்பது அனைவரும் அறிந்ததே.

'இவ்வாறான நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டதன் காரணமாக இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மிகவும் நம்பிக்கையுடன் எம்மால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி மாற்றத்தில், முஸ்லிம்கள்; நம்பிக்கை இழக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

'நாட்டில் காணப்படும் இனவாதச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதியில் முழுமையாக நம்பிக்கை வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அவர்களுக்குப் பூரண ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால், தற்போது முஸ்லிம்கள் புறந்தள்ளப்பட்டு, அவர்களின் உரிமைகள் உதாசீனப்படுத்தப்படுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

'கடந்த 30 வருடகால யுத்தத்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்குள் தமக்கான தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருந்த தமிழ் மக்கள் மீது மிகவும் மோசமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட நடவடிக்கையானது,  இந்த நாட்டில் மிகப்பெரிய கோர யுத்தத்துக்கு வழிவகுத்தது.

'தற்போது தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை  நாடியுள்ளனர். அவ்வாறே, தற்போது முஸ்லிம்களுக்கும் உள்ள ஒரேயொரு வழிமுறை சர்வதேச சமூகத்;தின் உதவியை நாடுவதாகும்' என்றார்.

15 comments:

  1. BROTHER SIBLY FAROOK,
    THERE IS NO NEED FOR SRI LANKA MUSLIMS TO SEEK INTERNATIONAL INTERFERENCE IN OUR MATTERS CONCERNING THE BBS AND OR THE EXTREME NATIONALIST BUDDHIST COMMUNALISTS. THE ISSUES HAVE TO BE RESOLVED BY THE “HNSAYA” PRESIDENT SIRISENA AND THE YAHAPALANA GOVERNMENT THAT THE MUSLIM PLAYED A MAJOR ROLE IN VOTING TO POWER IN 2015. "THE MUSLIM VOICE" STATES THAT IF THE 21 MUSLIM PARLIAMENTARIANS HAVE THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS LIKE CHAMPIKA RANAWAKA, WIJEYDASA RAJAPAKSA, THE PRIME MINISTER AND PRESIDENT MAITHRIPALA SIRISENA, THEY SHOULD RESIGN THEIR MINISTER, DEPUTY MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION AS A SEPARATE GROUP OF 21 MUSLIM MP's, INSHA ALLAH. THAT ALONE IS ENOUGH TO DEFEND OUR COMMUNITY AND TO GET BACK OUR DUE RIGHTS POLITICALY AND ADMINISTRATIVELY, INSHA ALLAH. YOUR SUGGESTION IS LIKE THE TAMIL PROVERB – “PAALAI VAITHUKONDU THAIRU THEDUWATHU POAL”. THE QUESTION IS, WILL THE 21 MUSLIM MP’s DO WHAT THEY HAVE TO DO, INSHA ALLAH FOR THE SAKE OF THE COMMUNITY.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. I too agree ...no alternative ways except divine intervene

    ReplyDelete
  3. Being a Muslim is becoming very expensive and it's been
    slow and steady process. The danger has been real since
    very long and we lived with it to this point. We knew
    the problems but ignored it for our convenience until it
    is gone beyond our control. Instead of being cautious we
    engaged ourselves in wanting more of everything by
    dividing into groups forgetting the fact that HATRED was
    already set in motion everywhere openly ! Our leaders ,
    both political and religious , utterly failed to warn us
    about pending dangers and just carried on as if nothing
    ever happened . In the meantime , Sinhala politics was
    alert about growing frustration among Sinhalese about
    Muslims , for right or wrong reasons . Muslim influence
    in Srilankan king making process is a historic one .
    But those who can not live with it now have come out in
    open to ATTACK IT calling names . What should we do now ? There are steps before going International . Muslim
    Politics , Religion , Think tank and Business must sit
    and discuss.

    ReplyDelete
  4. I also accept with brother noor nizam

    ReplyDelete
  5. I also accept with brother noor nizam

    ReplyDelete
  6. WE HAVE TO TURN OUR FACE MERCY AND VERY STRONG ENTIRE WORLD LEADER OF ALLAH.ALLAH.
    WHAT EVER BAD SITUATION WILL COME TO US
    WE SHOULD TURN TO ALLAH.EXAMPLE IN QURAN
    25 ANBIYA HISTORY CAN RECITE QURAN
    1.NABI IBRAHIB NAMROOTH ARRANGED BIG FIRE
    2.NABI MOOSA WITH FIR OWN
    THEY TURN HAS TO ALLAH.ALLAH HELPED THEM
    THIS IS TJE WAY UMTIL QIYAMA.NO ANY OTHER SOLUTION IN THE WORLD.
    RAMADAN IS TEACHING INBATTLE OF BADR ONLY 313 SAHABA NO ANY WEAPONS WITH FASTING.
    HOW ALLAH HELPED THEM .SUBAHANALLAH.PLS
    MAY ALLAH GUIDE US.PLS WE CHANGE OUR INTENTION AND BE CONNECTION WITH ALLAH.

    ReplyDelete
  7. இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றால், வாக்காளர்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, மக்கள் போட்ட பிச்சையான வாக்குகளில் மாகாணசபை உறுப்பினர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் என்ன மண்ணாங்கட்டிக்கு மேற்படி உறுப்பிணர்களாக நீங்கள் இருக்க வேண்டும். அரச வாகணங்கள் பெறுவதற்கும், சுகபோக வாழ்க்கைக்குமா?. சர்வதேசத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றால், அதை பொது மக்களே செய்து கொள்வார்களை. அதற்கு நீங்களா வேண்டும் ?. சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வெட்கம் இல்லாமல் கூறுகின்றீர்களே ?. இதற்கு ஒரு பத்திரிகையாளர் மாநாடு வேறு.
    கடந்த மகிந்த அரசின் போதும், தற்போதைய அரசின் போதும், முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது உங்களின் தலைவர் அமைச்சராகத்தானே இருந்தார். இவ்வாறு ஆளும் கட்சியுடன் அமைச்சராக இருந்து கொண்டுமா உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை ?. சர்வதேச நாடுகள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் சென்று தீர்வு பெறுவது எனத் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளிக்கு, இவர்களிடம் சென்று தீர்வு பெற்றுக் கொடுக்க போகின்றார் மாகாண சபை அங்கத்தவர் அவர்கள். தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஏன் உங்களால் ஒரு கண்டன பிரேரனையை மாகாண சபையில் நிறைவேற்ற முடியவில்லை ?. ஏன் அனைத்து முஸ்லிம் மாகாண சபைகள், பாராளுமன்ற உறுப்பிணர்கள் கையெழுத்திட்ட மஹஜரை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க முடியவில்லை ?. ஏன் இது விடயமாக உங்கள் கட்சி ஒரு கண்டன அறிக்கை வெளியிடவில்லை ?.
    குறைந்த பட்சம் கடந்த ஆட்சியில் நடைபெற்ற பிரச்சினைகள், தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் விடயமான ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களாவது உங்கள் கட்சியினரிடம் உள்ளதா?.
    தற்போதைய ஜனாதிபதிக்காக, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நீங்கள், ஏன் ஜனாதிபதியை சந்தித்து இது விடயமாக உரையாடமுடியவில்லை ?. உங்களால் முடியாவிட்டால், ஏன் உங்களின் கட்சியால் முடியவில்லை ?. கடந்த கால பிரச்சினைகளின் போது நீங்களோ அல்லது உங்களின் கட்சியோ ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், அரபு லீக்கிற்கும் எத்தனை அறிக்கை சமர்ப்பித்துள்ளீர்கள் ?. அதை பொது மக்களுக்கு காட்ட முடியுமா ?. பெரும்பான்மை கட்சியினரை பகைத்துக் கொண்டு இவ்வாறு சர்வதேசத்திடம் முறையிடும் தைரியம்தான் உங்களுக்கு உள்ளதா?. உங்கள் கட்சி, யாழ்ப்பாண அகதிகளுக்கும், அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளது ?. தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இனவாத செயற்பாடுகள், அரசின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றது என உங்களுக்கு சந்தேகம். ஆனால் இலங்கை முஸ்லிம்களுக்கு உங்கள் கட்சியின் மேற்பார்வையின் கீழ் இந்த இனவாத செயற்பாடுகள் நடைபெறுகின்றதா என சந்தேகம் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து மாகாண சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் அனுப்பிவைத்திருப்பது மக்களின் வரிப்பணத்தில் வீதிகள் அபிவிருத்தி செய்வதற்காகவும், கட்டிடங்கள் கட்டித் தள்ளுவதற்காகவும், இங்கொன்றும், அங்கொன்றுமாக பிச்சைக்கார அபிவிருத்திகளை செய்துவிட்டு நான்தான் செய்தேன், இத் திட்டங்கள் என்னால்தான், எங்கள் கட்சியால்தான் நிறைவேற்றப்பட்டது என, ஏதோ தனது வீட்டும் பணத்தில் செய்தது போன்று பெருமை அடித்துக் கொண்டு ஊரெல்லாம் கத்தித்திருவதற்காக அல்ல. உங்களை பிரதிநிதிகளாக தெரிவு செய்திருப்பது சிறுபான்மை முஸ்லிம்களின் மறுக்கப்படும் உரிமைகளை அரசிடம் போராடி பெற்றுக் கொடுப்பதற்காகவும், சிறுபான்மை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே ஆகும். மக்கள் உங்களை தெரிவு செய்த நோக்கங்களை மறந்துவிட்டு, அபிவிருத்தி என்ற போர்வையில் அடுத்த தேர்தலுக்காக உங்களுக்கான வாக்காளர்களை தயார்செய்து கொண்டிருக்கின்றீர்கள். தற்போது தமிழ் மக்கள் தமக்கான உரிமைக்களை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தை நாடியுள்ளனர் என நீங்கள் கூறியிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. தற்போது தானா தமிழர்கள் சர்வதேசத்திடம் முறையிட்டார்கள் ?..சர்வதேசத்திடம் அவர்கள் முறையிட்டு இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் கடந்து விட்டன. எங்கள் பிரதிநிதிகளும் தொண்டு நிறுவணங்கள் என்ற போர்வையில் சர்வதேசத்துடன் எத்தனையோ வருடங்களாக தொடர்பில்தானே உள்ளனர். வியாபாரம் நடாந்து கொண்டுதானே இருக்கின்றது.

    ReplyDelete
  8. Mr. Noor Nizam நீங்கள் சொல்லுவது முற்றிலும் நல்ல கோரிக்கை. எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு செய்வார்களேயானால் 24மணி நேரத்திற்குள் எங்களது பிரச்சனைக்கு முடிவுகட்டுவார்கள். ஆனால் இதனை யார் செய்வது? இதன் பிறகு Mr. சிப்லி பாரூக் அவர்கள் சொல்வதுபோல் சர்வதேசத்திடம் முறை இடவெண்டும். ஆனாலும் இதையும் யார் செய்வது. இது தா இங்குள்ள பிரச்னை. கடந்த அரசாங்கத்தில் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் Mr. ஹசன் அலி அவர்கள் ஐயிகிய நாட்டிடம் முறையிட்டார்.

    ReplyDelete
  9. Where Allah. he is not blind or deaf. lets make dua bro

    ReplyDelete
  10. We will go to International Community as we do not trust the Govt. Before that all Muslim Ministers should leave the unfaithful Govt.

    ReplyDelete
  11. First you guys get out from this government

    ReplyDelete
  12. This issue is lit bit cimplicated one...it is similar to any minority in the world. For instance, Burmese Muslim did ask international help...but none helped them except Turkish PM visited them ...that is it...do not talk about Arab other Muslim countries support or help..
    This is an internal issue so, we should have courage and skills to deal it ..
    Primary this is mixture of politics and envy upon our community..
    1) MS and RANI'L want to make politics out of this ...
    2) MR too want to make politics out of it
    3) JVP too did not talk about this too much ..
    4) some Muslim MPS may know what is going on behind but they do not want to talk about it for fear of their chairs..
    BBS knows out weekNess and our pathetic situation..unlike Tamil MPS we are behind poats...Look Tamil MPS for the last 70 years many of them did not accept ministerial post in order to win their rights of HOME Land ...
    Our MPS did not bother even to resign to protect our right ..
    If 21 of Muslim MPS could resign and sit with opposition they could teachange a lesson but they would not do that..
    Yes..international pressure could work but go to.western countries not Muslim countries..

    ReplyDelete
  13. முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
    (அல்குர்ஆன் : 3:200)
    www.tamililquran.com

    ReplyDelete
  14. காய்ச்சலும் தலைவலியும் அவன் அவனுக்கு வந்தா தான் புரியும்.

    ReplyDelete
  15. I think this guy is has blind eye when it comes to international politics.
    சர்வதேச அரசியல்தான் முஸ்லிம்களை திட்டமிட்டு அழித்துக்கொண்டு வரும் நிலையில் இவர் சர்வதேச உதவியை நாட வேண்டும் என்பது வேடிக்கையாக உள்ளது.
    முதலில் முஸ்லிம்களாகிய நாம் ஒன்றுபடவேண்டும்.
    பொறாமை, காட்டிக்கொடுக்கும் மனப்பான்மை , சுயநலம் இவற்றையெல்லாம் நீக்கி ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
    குறிப்பாக இந்த கூறுகெட்ட ஜமாத்வாதிகள் ஒன்றினைய வேண்டும்.
    அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி ஏதாவது குறைகூறினால் கோபம் வருமோ இல்லயோ ஆனால் இயக்கத்தைப்பற்றி கூறினால் பொசுக்கென கோபம் வரும்.இந்த நிலை மாறவேண்டும்.
    சுயநலமிக்க இயக்க தலைவர்கள் தாங்கள் இஸ்லாத்துக்கு நல்லதுதான் செய்பிறோம் என்று சொல்லி உண்மையில் அவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களை கூருபோடும் ஒரு நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள்.
    குர்ஆன் மிகத்தெளிவாக உங்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்த வேண்டாம் என எச்சரித்திருந்தும் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
    இந்த நிலை மாறவேண்டும், அப்பொழுதுதான் எமக்குவிடிவிகாலம் வரும்.

    ReplyDelete

Powered by Blogger.