May 22, 2017

ஊடக மாபியாவிலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் - மங்களவுக்கு ரஞ்சன் வாழ்த்து

“ஊடக மாபியாவிலிருந்து இந்த நாட்டை காப்பாற்ற நீங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும்” என மங்கள சமரவீரவுக்கு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

அமைச்சரவையில் இன்று -22-  மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தில் மங்கள சமரவீரவுக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

ஊடக அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்கவிற்கு காணி அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மங்கள சமரவீரவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment