Header Ads



இலங்கையிலுள்ள மியன்மார் முஸ்லிம்களுக்கு, அகதித்தஞ்ச அனுமதி அட்டை வழங்க இணக்கம்

இலங்கையிலுள்ள தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திடம் முன் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30ம் திகதி காங்கேசன்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உட்பட 30 ரோஹிஞ்சா அகதிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மீரிகான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.

எந்நேரத்திலும் மியான்மாருக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்திலுள்ள இவர்கள் தமிழ் நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதப் பயணம் மேற்கொண்டிருந்த போது இலங்கைக் கடல் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் தஞ்சம் பெற விரும்பும் ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகளின் கோரிக்கை தொடர்பாக இன்று -19- வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் மற்றும் மூத்த வழக்கறிஞர் சிராஜ் நூர்டின் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவொன்று கொழும்பிலுள்ள ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையின் போது குறித்த அகதிகளுக்கு அகதிகளுக்கான அந்தஸ்து வழங்கும் அனுமதி அட்டை வழங்க இணக்கம் தெரிவிககப்பட்டதாக சிராஜ் நூர்டின் தெரிவிக்கின்றார்.

தடுப்பு முகாமிலுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐ.நா அதிகாரிகளினால் பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

சுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ் நாடு அதிராம்பட்டினத்திலும் தங்கியிருந்த இவர்கள் கடந்த மாதம் 28ம் திகதி தமிழ் நாட்டிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு படகு மூலம் புறப்பட்டுள்ளனர்.

படகு திசை மாறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் அகதி அந்தஸ்து இவர்களுக்கு கிடைத்திருந்தாலும் இவர்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஏனைய விடயங்கள் தொடர்பாக தாங்கள் நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை சந்தித்து பேவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குறிப்பிடுகின்றார்.

3 comments:

  1. பாவம் அப்பாவி மக்கள் இவர்கள் எங்கள் முஸ்லீம் அமைச்சர்கள் எப்படி சரி இவர்களுக்கு இலங்கை மண்ணிலே இருப்பதற்கு உதவிகள் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. நமது தெற்காசியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதும், இலங்கையை விடவும் ஐம்பது மடங்கு பெரு நிலத்தைக் கொண்டதுமான அவுஸ்திரேலியா இப்பிராந்திய மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்டது.

    ஆனால், ரோகின்யா அகதிகளின் விடயத்தில் இலங்கை நடந்து கொள்ளும் முறை அவுஸ்திரேலியர்களை விடவும் ஐநூறு மடங்கு மேல்!

    ReplyDelete
  3. May allah bless our counntry

    ReplyDelete

Powered by Blogger.