Header Ads



மாயக்கல்லி மலையில் பௌத்த வழிபாடுகள், பொலிஸாரும் வேடிக்கை பார்த்தனர்


-விடிவெள்ளி-

மாணிக்­க­மடு மாயக்­கல்­லியில் அமைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலைக்கு வெசாக் புனித தினத்தை முன்­னிட்டு நேற்று முன்­தினம் மாலை விசேட பூஜை வழி­பா­டுகள் நடத்­தப்­பட்­டன.

மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலைக்கு பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டுள்ள பொலிஸார் இதற்கு எந்தத் தடை­க­ளையும் விதிக்­க­வில்லை.

இது தொடர்பில் அம்பாறை வித்­தி­யா­னந்த பிரி­வெ­னாவின் அம்­பே­பிட்­டிய சீல­ரத்ன தேரர் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;
பூஜை வழி­பா­டு­க­ளுக்­காக சுமார் 80 பக்­தர்கள் வருகை தந்­தனர்.

இதில் அரை­வா­சிப்பேர் மத­கு­ரு­மார்­க­ளா­வார்கள். அமை­தி­யான முறையில் வழி­பா­டு­களும் இடம்­பெற்­றன. எவ்­வித எதிர்ப்­பு­க­ளையும் எதிர்­நோக்­க­வில்லை.

மாலை 5.30 மணியளவில் வழிபாடுகள் நடத்தப்பட்டன சுமார் 10 பொலிஸார் கடமையில் இருந்தார்கள் என்றார்.

4 comments:

  1. குலைக்கிற நாய் கடிக்காது, சும்மா சூ..சூ.. என வெருட்டி விட்டாலே ஓடி ஒழிந்துவிடும் என நம்ம பிக்குகளுக்கும் தெரிந்துவிட்டது போலும்.

    ஏன் பிக்கு சாரே, கூரைகள் என்னுமா போடவில்லை?

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலால் வாழ்கிறோம் என்கிறோம்; ஆதம் (அலை) காலம் முதல் வாழ்கிறோம் என்கின்றோம்.

    ஆனால், எமது சக மனிதர்களுக்கு அல்லாஹ்வையும் அவனது மார்க்கத்தையும் உரிய முறையில் அறிமுகப்படுத்தினோமா? என்று நாம் எம்மையே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

    இஸ்லாம் ஒரு பொதுச் சொத்து. அதனை நாம் எமக்கு மத்தியில் மாத்திரம் வைத்துக் கொண்டிருப்பதால் இவ்வித பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

    அவர்களும் நாமும் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை அவர்களையும் எம்மையும் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ் இஸ்லாத்தில்தான் வைத்துள்ளான்.

    அவர்கள் எம்மை வேற்றுக் கிரகவாசிகளைப் போன்று கருதாதவாறு எமது வரைமுறைகளுக்கு உட்பட்டு அவர்களுடன் நட்புடன் பழக வேண்டும்.

    மார்க்கத்தில் இதுவரை அவர்கள் எமது சகோதரர்களாக இல்லாத போதும் ரத்த உறவில் நாம் அனைவரும் சகோதரர்களே. முதல் மனிதர்கள் ஆதாம் ஏவாளின் குடும்பத்தினர்களே. எதோ ஒரு முறையில் தூரத்து உறவினர்களே.

    இன்றைய நிலையில் ஒருவர் ஆகக் குறைந்தது பத்துப் பேருக்காவது இஸ்லாத்தை நடைமுறை வாழ்க்கை ஊடாக எடுத்துச் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

    இறுதித் தூதரின் ஓர் அமானிதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். இது பற்றி நாம் கேட்கப்படுவோம்.

    அவர்களால் எதோ ஒரு வகையில் நாம் துன்புறுத்தப்படுவோம் என்றால், அது அவர்களது மார்க்கமுமான இஸ்லாத்தை நாம் உரிய முறையில் எடுத்துச் சொல்லாத குற்றத்துக்காக அல்லாது வேறு எதற்காக இருக்க முடியும்?

    ஆகவே, எமது கடமையை இனி உணர்ந்து நடப்போமாக.

    ReplyDelete
  3. Every body has a right to follow tgeir religion since the SriLanka is socialist county.
    No body can be against for this incl muslims

    ReplyDelete
  4. விசர் நாய்கள் எல்லாம் 2009 இல் கொன்று அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது மிஞ்சி இருப்பது நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு தெருவில் அலையும் கட்டாக்காலி நாய்கள் மட்டுமே என்பது எங்களுக்கும் தெரியும் .

    ReplyDelete

Powered by Blogger.