Header Ads



வடகொரிய ஏவுகணைகளை அழிக்க, இயங்கத் துவங்கியது அமெரிக்காவின் ''தாட்"

தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

தாட் ஏவுகணை அமைப்பு "தொடக்க இடைமறிப்பு திறன்'' கொண்டதாக மட்டுமே உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றாலும் இது வடகொரியாவின் ஏவுகணைகளை இடைமறிக்கும் என்று கூறப்படுகிறது.

வடகொரியாவின் இருந்து வரும் தொடர் அச்சுறுதல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.

சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு வட கொரியா கோபமாக பதிலளித்தது. மேலும், அமெரிக்கா ஓர் அணு ஆயுதப் போரை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளதாக குற்றம் சாட்டியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன் னை சரியான தருணத்தில் சந்தித்தால் பெருமைப்படுவேன் என்று கூறிய அடுத்த நாள் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தாட் ஏவுகணை என்றால் என்ன ?

பாய்ந்து வரும் குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இயங்கும் நேரத்துக்கு முன்பு எதிர்கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது. 200 கிலோமீட்டர் வரம்பில் 150கிலோமீட்டர் உயரம் வரை சென்று தாக்கும். வட கொரியாவின் சாத்தியாமான தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னதாக குவாம் மற்றும் ஹவாய் பகுதிகளில் தாட் ஏவுகணையை நிறுவியது.

தாட் எவ்வாறு வேலை செய்கிறது?

எதிரி படை ஓப் ஏவுகணையை செலுத்தும்போது, தாட் ரேடார் அமைப்பு அதை கண்டறிந்துவிடுகிறது. கட்டளையிடப்பட்டு இயக்கப்பட்டதும் அது பறந்து சென்று எதிரியின் ஏவுகணையை எதிர்கொண்டு இயங்கும் முன்பு மோதி அழிக்கிறது. தாட் ஏவுகணை தடுப்பு ரேடார் ஏவப்படும் வாகனத்தில் இருந்து ஒரே நேரத்தில் எட்டு ஏவுகணைகளை அனுப்ப முடியும்.

No comments

Powered by Blogger.