Header Ads



பறக்கும் விமானத்தில், இலங்கையர்களிடையே மோதல்


பறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பயணிகள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இறுதியில் மோதலாக மாறியுள்ளதென விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 45 மற்றும் 35 வயதுடைய பயணிகள் இருவரே இவ்வாறு மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இரவரும் தங்கொட்டுவ மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஜப்பானில் பல வருடங்கள் சேவை செய்துவிட்டு நாடு திரும்பியவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நரீடா விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யு.எல்.455 என்ற விமானத்தில் 100க்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ள நிலையில் அவர்கள் நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விமானத்தில் பலர் உறக்கத்தில் இருந்த வேளையில், இலங்கை பயணி ஒருவர் அதிகமான மது அருந்திவிட்டு அருகில் இருந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

விமான பயணிகளுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் நடத்துக் கொண்டிருந்த இந்த பயணி தொடர்பில் மற்றுமொரு அதனை தடுக்கு முயன்றுள்ளார். இதன்போது இருவருக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்த நிலையில், விமான நிலைய ஊழியர்களினால் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த இரண்டு பயணிகளையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

3 comments:

  1. Srilankan Airline is responsible for this incident as they serve unlimited alcohol in the flight.

    ReplyDelete
  2. பல வருடங்கள் குடித்து காலம் கழிக்கும் இவர்கள் விமானத்திலும் மதுவை குடிக்க வேண்டும் என்ற கேட்ட நோக்கத்தோடு சகல விமான நிறுவனங்களும் செயட்படுகின்ற்றது.உண்மையாகவே விமானத்தின் பயணம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போகும் ஒரு பிரயாணம் இதில் இறைவனிடம் பிரத்தித்தவர்களாக செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது மதுவை கொடுத்து கவனத்தை திசை திருப்பி இருக்கிறார்கள்.முற்றாகவே விமானங்களில் மதுக்கொடுப்பதை தடுத்தால் யாரும் புயரச்சினை போடமாட்டார்கள்.இவ்வாறான நினையில் விமான ஓட்டிகளுக்கும் மதுவை கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

    ReplyDelete
  3. SMOKING not Allowed BUT ALCOHOL is poured into the mouth of Srilankan Airline customers.

    HOW come they allow INTOXICANT.. that one consumes and then BAD SMELL to the near by traveller and finally come to this extend to disturb WOMEN.

    IT is fully from the mistak of SRILANKA AIRLINE< Who serves Alcohol to their customers but disturb the descent customers this way.

    ReplyDelete

Powered by Blogger.