Header Ads



கத்தார் வாழ், இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபடுகிறார்கள்..!

கத்தார் நாட்டில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் கடந்த பலவருடங்களாக இலங்கை நாட்டில் நிலவும் பல்வேறுபட்ட பணிகள், அவசர நிலைமைகளில் தங்களது பங்களிப்புகளை வழங்கி வருவது குறிப்பிட்டுக்கூறக்கூடுய யாவரும் அறிந்த விடயமாகும் .

ஏனைய மத்திய கிழக்கு நாடுகளை போலன்றி, கத்தார் நாட்டில் வாழும் எம் இலங்கை முஸ்லிம்களின் பலமான ஒற்றுமையும், ஓரணியில் நின்று அவர்கள் செயற்படுவதுமே  இந்த முன்மாதிரியின் இரகசிய சூத்திரமாகும். அந்த வகையில் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக இயங்கும் தஃவா அமைப்புக்கள், நலன்புரி அமைப்புக்கள், பாடசாலை பலைய  மாணவர்  சங்கங்கள் , ஊர் நலன்புரி அமைப்புகள்,அரபுக்கலாசாலை பழைய மாணவர்  சங்கங்கள், எந்த ஒரு அமைப்பிலும் ஈடுபாடில்லாத புத்துஜீவிகள்   என்று அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பே Federation  of Srilankan Muslim Associations - Qatar (FSMA-Q) ஆகும்.FSMAQ ஆனது 40க்கும் மேற்பட்ட அமைப்புக்களின் ஒன்றியமாகும்.

கத்தார் நாட்டின் சட்ட திட்டங்களையும்  மதித்து, நாட்டில் உள்ள உறவுகளின் தேவைகள், பிரச்சினைகளையும் நுற்பமாக புரிந்துணர்ந்து சேவையாற்றும் FSMA-Q, கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம்களிடம் வேண்டும் பணிவான வேண்டுகோள், கத்தார் நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றிய எந்த விதமான அனுபவமும் இல்லாத வெறும்  உணர்ச்சிகளின்  பின்னால் நின்னிற்கும் தனிப்பட்ட   நபர்களின் பிழையான அழைப்புகளின் பின்னல் சென்று இந்த சமூகத்தை காட்டிக்கொடுப்பது மட்டுமன்றி, கத்தார் நாட்டில் வாழும் இலங்கை முஸ்லிம்களால் நடக்கும் மலை போன்ற பணிகளுக்கு குந்தகம் விளைவிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்வோம்.

றிஸ்லான் பாரூக்

பொதுச்செயலாளர்

FSMA-Q

1 comment:

  1. this problem only belongs to Qatar what about other areas?

    ReplyDelete

Powered by Blogger.