Header Ads



மிகவும் வேதனையாகவுள்ளது, நியாயமானதா என இதயத்திடம் கேட்க வேண்டும் - கீதா

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இன்று (04) மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

கீதா குமாரசிங்கவிற்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேன்றையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்த அவர், அது குறித்து தெளிவூட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று சென்றிருந்தார்.

இதனையடுத்து அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்,

தோல்வியடைந்த ஒருவர் எனது இடத்திற்கு வருவதற்கு ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார். மிகவும் வேதனையாகவுள்ளது. அவர் விழாக்களை நடத்துகின்றார். பட்டாசுகளைக் கொளுத்துகின்றார். பல்வேறு விடயங்களை செய்கின்றார். எனினும், தான் செய்வது நியாயமானதா என அவர் தனது இதயத்திடம் கேட்க வேண்டும். மக்கள் அவரை நிராகரித்தார்கள். எனினும், தற்போது வேறொருவரின் இடத்தைப் பெறுவதற்காக முயற்சிப்பது சரியா என மனசாட்சியிடம் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வெட்கமடைவார்.

1 comment:

  1. கீதா, எப்போதும் வெட்கத்தோடு, மிகவும் திறந்த மனதோடு இருப்பவர்.

    ReplyDelete

Powered by Blogger.