Header Ads



ஞான­சார தேரர் எங்கே..?

(விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள, ஆசிரியர் தலையங்கம்)

பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அதற்­காக நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் திணைக்­களம் கடந்த 25.05.2017 அன்று வெளி­யிட்ட உத்­தி­யோ­க­பூர்வ ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

பொலிசாரின் கடமை­களுக்கு இடையூறு விளை­வித்­தமை, இனங்­களுக்கிடை­யி­லான ஒற்­று­மையை சீர்கு-­லைக்க முயற்­சித்­தமை,  வாக்­கு­மூலம் பெறு­வதற்­காக பொலிசார் விடுத்த அழைப்பை புறக்கணித்­தமை உள்-­ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழேயே தேரரைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டுள்­ள­தாக பொலிசார் தெரி­வித்­தி­ருந்­தனர்.

எனினும் இவ்­வாறு அறி­விக்­கப்­பட்டு இன்­றுடன் 7 நாட்­க­ளா­கின்ற போதிலும் ஞான­சார தேரரை பொலிசார் கைது செய்­ய­வில்லை.
தமது அமைப்பின் செய­லா­ள­ரான குறித்த தேரரின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் அவர் தலை­ம­றை­வாக வாழ்ந்து வரு­வ­தா­கவும் அவ்­வ­மைப்பு அறி­வித்­தி­ருந்­தது.

இருப்­பினும் ஞான­சார தேரர் தற்­போது பகி­ரங்­க­மாக ஊட­கங்கள் மூலம் தனது கருத்­துக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் முகநூல் மூல­மாக சில தினங்­க­ளுக்கு முன்னர் ஒலிப்­ப­தி­வொன்றை அவர் வெளி­யிட்­டுள்ளார். மேலும் கொழும்­பி­லி­ருந்து வெளி­யாகும் ஆங்­கில வார இத­ழொன்­றுக்கு பேட்டி ஒன்­றையும் வழங்­கி­யுள்ளார்.

அப்­ப­டி­யானால் ஞான­சார தேரர் எங்­கி­ருக்­கிறார் என்­பதை இன்­னுமா பொலிசார் அறி­யா­ம­லி­ருக்­கி­றார்கள்? நிய­மிக்­கப்­பட்ட நான்கு விசேட பொலிஸ் குழுக்­களும் இன்­ன­முமா தமது தேடுதல் வேட்­டையை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்? அல்­லது இவர்கள் அனை­வ­ரி­னாலும் கண்­டு­பி­டிக்க முடி­யாத மறை­வி­டத்­திலா ஞான­சார தேரர் இருந்து கொண்­டி­ருக்­கிறார்?

ஞான­சார தேரரை அர­சாங்­கத்­தி­லுள்ள அமைச்­சர்கள் ஒரு சிலரே பாது­காத்து வைத்­துள்­ள­தாக பர­வ­லாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அப்­ப­டி­யானால் இந்த அமைச்­சர்­களின் அழுத்­தங்­க­ளால்­தானா தேரர் இன்னும் கைது செய்­யப்­ப­டா­ம­லுள்ளார்? இந்தக் கேள்­வி­க­ளுக்கு விடை தரப்­போ­வது யார்?

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கில் தேரர் கடந்த 24ஆம் திகதி ஆஜ­ரா­க­வில்லை. காய்ச்சல் என இதற்கு காரணம் சொல்­லப்­பட்­டது. இன்­றைய தினம் குறித்த வழக்கு மீண்டும் விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது. இதில் அவர் ஆஜ­ரா­வாரா இன்றேல் காரணம் சொல்லித் தப்­பிக்க முனை­வாரா என்­ப­தையும் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.

இப்­போது சிவில் உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் எழுப்­பு­கின்ற கேள்வி, ஞான­சார தேரர் நாட்டின் சட்­டத்­திற்கு உட்­பட்­ட­வரா அல்­லது அப்­பாற்­பட்­ட­வரா என்­ப­தே­யாகும். இந்தக் கேள்­விக்கு பதில் சொல்ல வேண்­டி­யது அர­சாங்­கத்­தி­னதும் நீதி­ய­மைச்­ச­ரி­னதும் கடப்­பா­டாகும்.

நாட்டில் அனர்த்த சூழல் ஏற்­பட்­டுள்­ளது என்பதற்காக ஞானசார தேரரின் விடயத்தை கிடப்பில் போடவோ, மறக்கடிக்கச் செய்யவோ முனையக் கூடாது.

அவரது செயற்பாடுகள் தொடர இடமளிக்கப்படுமாயின் அதுவே மற்றுமொரு அனர்த்தத்திற்கு வழிவகுக்கும்.
எனவேதான் பொலிசார் வாக்குறுதியளித்தபடி ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

6 comments:

  1. ஞானசாரர் அரசின் பாதுகாப்புடன் மிகப்பாதுகாப்பாக இருப்பார்.அவரைச் சட்டம்
    ஒன்றும் செய்துவிடாது.UNPயும் 'பீ' தான் SLFPயுன் 'பீ' தான்!

    ReplyDelete
  2. இதுதான் மைத்திரி + ரணில் அவர்களின் நல்லாட்சி. இந்த ஒருத்தனுக்கே நீதியை நிலைநாட்டமுடியாத நல்லாட்சியா சமூகங்களின் பிரச்னையை தீர்க்கபோகுது.

    ReplyDelete
  3. நாட்டில் காட்டாட்சி நடத்தும் ஒருவனௌ கைது செய்ய முடியாத அரசாங்கம் மக்களுக்கு எதற்காக,சுயாதீன நீதிமன்றம்,சுயாதீன போலிஸ் எங்கே தேர்தலில் கூவினார்கள் சுயாதீன போலிஸ் ஏன் அரசியல் வாதிகளுக்கு அடிபணிய வேண்டும் சுயாதீனமாக இயங்க முடியவில்லையா?

    ReplyDelete
  4. The government has to do all the needs& support for not only Gnasara thero but also anybody who want to eliminate the islamic terrorism & Jihad

    ReplyDelete
  5. There's no Islamic terrors in the world, but there are many terror groups under the disguise of Arabic names, like pottu amman, Karuna Amman. All fake names.

    ReplyDelete
  6. did you check gnanasera at my3's presidential house or at his own house?, at ranil's alari house or sathsiripaya?, at champika's ministry or at home? vijayathaasa rajapaksha's home or ministry?, IPG's home or at office? if not... then you could also check mahintha's home or kothapaya's home! sometimes... he may be hidden at chief justice's home as requested by leaders. everyone is against muslims and acting with different characters.

    ReplyDelete

Powered by Blogger.