Header Ads



சிலையை வைக்­க அனுமதித்தோர், விகாரையை எதிர்க்கின்றனர்

-ARA.Fareel விடிவெள்ளி-

இறக்­காமம் மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­போது அதற்கு அனு­மதி வழங்கி அமை­தி­யாக இருந்த முஸ்லிம் தலை­மைகள் இன்று விகாரை நிர்­மாணம் பற்றி பேசு­வதும் எதிர்ப்­பதும் வேடிக்­கை­யா­னது. மாயக்­கல்லி மலையில் பிரச்­சி­னையே புத்தர் சிலை­தான். எனவே முஸ்லிம் தலை­மைகள் முதலில் புத்தர் சிலை தொடர்­பாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார். 

மாயக்­கல்லி மலைப்­பி­ர­தே­சத்தில் விகாரை நிர்­மா­ணிக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றமை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், மாயக்­கல்லி மலையில் பௌத்த தேரர்கள் மற்றும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் அம்­பாறை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுத்­த­லை­வ­ரான முஸ்லிம் காங்­கி­ரஸின் கிழக்கு மாகாண அமைச்சர் ஒரு­வரின் அனு­மதி பெறப்­பட்டே புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­தாக அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதி­பரும் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் ஒரு­வரும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். 

அன்று மலையில் சிலை வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கி­ய­வர்­களே இன்று விகாரை நிர்­மா­ணத்தை எதிர்க்­கி­றார்கள். அப்­ப­கு­தியில் எவ்­வித நிர்­மா­ணமும் வராது, மேற்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது ஜனா­தி­பதி இந்த உறு­தியை வழங்­கி­யி­ருக்­கிறார் என்­றெல்லாம் கூறி மக்­களை ஏமாற்றி வரு­கி­றார்கள். 

எனவே, பிரச்­சினை இப்­போது விகாரை நிர்­மா­ண­மல்ல. மலையில் உள்ள புத்தர் சிலை­யே­யாகும். மாயக்­கல்லி மலையில் புத்­தர்­சிலை இருக்கும் வரை இந்­தப்­பி­ரச்­சினை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்­பதை முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மைத்­துவம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். 

கடந்த 30 ஆம் திகதி இறக்­கா­மத்­துக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நகர திட்­ட­மிடல் நீர்­வ­ழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் மாயக்­கல்லி மலை விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் ஜனாதிபதி அப்பகுதியில் எந்த நிர்மாணப்பணிகளும் முன்னெடுக்கப்பட மாட்டாதென உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 comment:

  1. UL VEETU SANDAI
    WE DONT KNOW ANYTHING
    MAY ALLAH BLESS OUR POLITICIANS

    ReplyDelete

Powered by Blogger.