Header Ads



நான் வேண்டாத ஆள் தானே..?

இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் நான் வேண்டாத ஆள் தானே என்று முதலமைச்சர் 

சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியவின் சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, இந்திய பிரதமர் மோடியுடன் இன்று நடைபெறவுள்ள சந்திப்பு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய பிரதமருடன் சந்திப்பு இடம்பெறவில்லை. கைலாகு மட்டுமே கொடுக்கப்பட்டது. இருப்பினும் சென்றமுறை வந்தபோது என்னை சந்தித்த ஞாபகம் உள்ளதாக இந்திய பிரதமர் தெரிவித்தார்.

ஆனால், வெளிவிவகாரதுறை அமைச்சின் செயலாளார் ஜெய்சங்கரிடம், வடமாகாணத்தில் மேலும் அதிகமான காணிகளை மக்களிடம் இருந்து பெறாது தற்போது இருக்கும் விமான நிலையத்தினை பிராந்திய ரீதியில் வர்த்தக விமான நிலையமாக நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூறியதாக தெரிவித்தார்.

மேலும் காங்கேசன்துறை துறைமுகம் பற்றியும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பிலும் எடுத்து கூறியதாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.