Header Ads



மழை குறைந்தது, நிவாரணப் பணி தீவிரம், மக்களை அவதானமாக இருக்க வேண்டுகோள்

கடந்த 24 மணித்தியாலயங்களில் மழை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ள போதும் வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட மக்களை மீட்பு பணிகள் மற்றும் நிவாரண சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலமை தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தினால் இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது, 

கங்கைகள் ஊற்றெடுக்கும் பிரதேசங்களில் பதிவான அதிக மழைவீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது தற்போது கடலை அண்டிய பிரதேசங்களுக்கு பயணிப்பதால் களனி கங்கை, களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகிய கங்கைகளுடன் தொடர்பான கடலை அண்டிய பிரதேசங்கள் நீரினால் மூழ்கிய வண்ணம் உள்ளன. 

அதனால் குறித்த பிரதேசங்களை சூழ வாழும் நபர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக இடம்பெயருமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமது பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி கிடைக்காத போதும், கங்கைகளுக்கு அருகில் இருக்கும் அனைவருக்கும் குறித்த அவதானம் காணப்படுகின்றது. 

சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் பலத்த மழை பொழியக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை அனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு முற்படும் போது பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெற்று நிவாரணப்பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

குடிநீர், உலர் உணவுகள், மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்கள், மருத்துவ வகைகள், புதிய துடைப்பாண்கள், புதிய ஆடையணிகள், செருப்பு போன்ற பொருட்களே இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு தேவையென மாவட்ட செயலாளர்கள் அறிவித்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.