Header Ads



விஷமருந்தியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின், அவரது வீட்டுக்குச்சென்று திருடிய பெண்

(எஸ்.கே.)

கண­வ­னுடன் ஏற்­பட்ட தக­ராறு கார­ண­மாக வாழ்க்­கையில் விரக்­தி­யுற்று விஷ­ம­ருந்­திய பெண்ணை வைத்­தி­ய­சா­லையில்  அனு­திக்க உத­விய  அயல் வீட்டுப் பெண் ஒருவர், விஷ­ம­ருந்­திய பெண் இறந்து விடுவார் என நினைத்து அவ­ரது வீட்­டுக்குள் இர­க­சி­ய­மாக நுழைந்து அலு­மா­ரி­யி­லுள்ள தங்க ஆப­ர­ணங்­களை திருடிச் சென்ற நிலையில் சந்­தே­கத்தின் பேரில் அலவ்வ பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

விஷ­ம­ருந்­திய 40 வய­தான பெண் பூரண சுக­ம­டைந்து வீடு திரும்­பி­ய­போது  தங்க ஆப­ர­ணங்கள் திருட்டுப் போயுள்­ளதை அறிந்து பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து விஷ­ம­ருந்­திய பெண்ணை வைத்­தி­ய­சா­லையில்  அனு­ம­திக்க உத­விய அலவ்வ கொரொக்­கல்­தெ­னி­யவைச் சேர்ந்த இரு பிள்­ளை­களின் தாயை பொலிஸார்  கைது செய்­துள்­ளனர்.

விஷ­ம­ருந்­திய பெண் தமக்கு உத­வும்­படி கூச்­ச­லிட்­ட­தை­ய­டுத்து அவரை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்க தேவை­யான ஆடை­களை எடுக்க அலு­மா­ரியைத் திறந்­த­போது தங்க ஆப­ர­ணங்­களை கண்டு கொண்ட பின்­ன­னர், விஷ­ம­ருந்­திய பெண் வைத்­தி­ய­சா­லையில் இறந்­து­வி­டுவார் என நினைத்து இர­க­சி­ய­மாக அவ­ரது வீட்­டுக்குள் நுழைந்து அலு­மா­ரி­யி­லி­ருந்த தங்க ஆப­ர­ணங்­களை எடுத்துக் கொண்­ட­தாக அவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய ஒப்­புதல் வாக்கு மூலத்தில் தெரி­வித்­துள்ளார். 

திரு­டிய தங்க ஆப­ர­ணங்­களில் சில­வற்றை அல­வ்வ நக­ரி­லுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்து தனது கடன்­களை மீளச் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் எஞ்­சி­யி­ருந்த தங்க ஆப­ர­ணங்­களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.