Header Ads



ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவை மீறும் ஞான­சாரர் - பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய ஹரீஸ்

ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவை மீறி பல­வந்த போக்­குடன் செயற்­பட்டு இறக்­காமம் பகு­திக்குள் நுழையும் பொது­பல சேனாவின் ஞான­சார தேர­ரையும் சிங்­கள ராவய பிக்­கு­களையும் உடன் கைது செய்ய வேண்டும் என விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்­சரும் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.‍எம்.எம்.ஹரீஸ் நேற்று சபையில் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விசேட வியா­பாரப் பண்ட அற­வீட்டுச் சட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு வலி­யு­றுத்­தினார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி இழைத்த அர­சாங்­கத்தை தோற்­க­டித்து விட்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் கூட சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது. 

அம்­பாறை மாவட்­டத்தில் அனைத்து இன மக்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழந்து வரும் பிர­தே­சத்தில் பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் மற்றும் சிங்­கள ராவய பிக்­குகள் பல­வந்­த­மாக சென்று இறக்­காமத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை சுவீக­ரிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­யிட்டு மாய­க்கல்லி பகு­தியில் பல­வந்­த­மாக காணி சுவீக­ரிப்­ப­தனை தடுத்து நிறுத்­து­வ­தாக குறிப்­பிட்­டி­ருந்தார். 

எனினும் ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவை மீறி ஞான­சார தேரர் மீளவும் அங்கு செல்ல முற்­பட்டார். எனி­னும் பொலிஸார் தலை­யிட்டு அதனை தடுத்து நிறுத்­தினர். இல்­லையேல் பாரிய இனக்­க­ல­வரம் ஏற்­பட்­டி­ருக்கும் .

இது தொடர்­பாக முன்­னைய ஆட்­சி­யிலும் குறிப்­பிட்டோம். எனினும் இது தொடர்பில் செவி­ம­டுக்­கா­ததினால் அளுத்­க­மவில் பாரிய இனக்­க­ல­வரம் ஏற்பட்டது. 

எனவே ஜனாதிபதியின் உத்தரவை மீறி பலவந்த போக்குடன் செயற்படும் பொதுபல சேனாவின் ஞானசார தேரரையும் சிங்கள ராவய பிக்குகளையும் உடன் கைது செய்ய வேண்டும் என பிரதியமைச்சர் ஹரீஸ் சுட்டிக்காட்டினார்.

5 comments:

  1. ஏன் ஏனைய அமைச்சர்கள் வாய்திறக்க மாட்டார்களா?

    ReplyDelete
  2. How do you know, Janasara has gone beyond My3. Do not trust My3. He will tell you some thing to you and another thing to Janasara.

    ReplyDelete
    Replies
    1. ஞானசாரைக்கும் அவரை வளர்த்துப் போசிக்கும் குலாத்துக்கும் ஆதரவளிக்கக்கூடிய முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்று இதனை எடுத்துக்கொள்ளலாமா?

      Delete
  3. Useless to believe sirisena...he also kind a extremist...solution is protect own villages by our self...

    ReplyDelete
  4. நீதியை நேசிக்கும் ஏனையோரும் குறிப்பாக இதர முஸ்லிம்களும் பங்கு கொண்டிருக்க வேண்டிய பேச்சு.

    இவ்வித சமுகப் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கும் ஓர் துணிச்சல் வேண்டும். பாரராட்டுக்கள்!

    ReplyDelete

Powered by Blogger.