May 25, 2017

இன­வாதம் கரை­பு­ரண்­டோ­டு­கி­றது, முஸ்­லிம்கள் மீது மூர்க்­கத்­த­ன­ம் முன்­னெ­டுப்பு - அஸ்வர்

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக நடந்­தேறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யுள்­ளது. எனவே நல்­லாட்சி அர­சாங்­கத்தை  ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரு­வதில் மிகுந்த பங்­காற்­றிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட­ன­டி­யாக அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு பொர­ளை­யி­லுள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெ­ற­்றது. அதில் கலந்­து­கொண்டு உரை­ யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெர­ி வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போது எப்­போ­து­மில்­லா­த­வாறு இன­வாதம் கரை­பு­ரண்­டோ­டு­கி­றது. முஸ்­லிம்கள் மீது மூர்க்­கத்­த­ன­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

குறித்த அசம்­பா­வி­தங்கள் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் முறை­யி­டப்­பட்­டுள்­ளது. எனினும் எவ்­வித நட­வ­டிக்­கையும் இல்லை என அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தெரி­விக்­கின்­றனர். எனினும் அவ்­வா­றான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்தான் முன்னாள் அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள் இடம்­பெ­று­வ­தாகக் குற்­றம்­சாட்டி  நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­சிக்கு கொண்டு வந்­தனர்.

ஆகவே தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு முஸ்லிம் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுமே பொறுப்­புக்­கூற வேண்டும். குறித்த பிரச்­சி­னை­க­ளுக்கு  அர­சாங்­கத்தால் நட­வ­டிக்கை எடுக்­க­முடியாது போனால் பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் உறுப்­பி­னர்­களும்  உட­ன­டி­யாக அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேறி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து மாற்று நட­வ­டிக்கை எடுக்க  முன்­வர வேண்டும்.

அல்­லா­து­போனால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடர்ந்தும் மிக இக்­கட்­டான நிலையை அடையும். அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் சில தினங்களில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ளது. முஸ் லிம்கள் சுதந்திரமாக அம்மாதத்தில் தமது மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார்.

2 கருத்துரைகள்:

SURA - AHZAAB (The Clans). Verse 57.
God Amighty Allah has stated in the Holy Quran what will be the punishment to those who malign ALLAH and HIS messenger, ALLAH HATH CURSED THEM IN THE WORLD AND THE HEREAFTER, AND HATH PREPARED FOR THEM THE DOOM OF THE DISDAINED.
Gnanasara Thero and the extremist BBS Buddhist Nationalist groups who have maligned the Holy Prophet Mohamed (Peace be upon him) will befall the "PROMISED PUNISHMENT" in this world and the hereafter. As believers (TRUE MUMEENS), we have to be PATIENCE, and ask dua from God AllMighty Allah, NOT go after politicians, Prime Ministers and Presidents and Foreign Embassies/Ambassadors asking for "protection" and "JUSTICE", Insha Allah.
"The Muslim Voice" wishes that this will be a message to our political leaders, politicians, civil society leaders, community leaders, Muslim NGO leaders, so-called Muslim community and religious leaders, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Kadantha aadchiyil illatha inavaathama ippothu?appoluthu Mahintha maththayavin koalayavakaththaney iruntheerkal.Appothu muslimkalukkaka eathavathu paralumanraththil pesineerkala anparey.

Post a Comment