May 01, 2017

முஸ்லிம் மாணவிகள், பர்தாவைக் கழற்ற வேண்டாம் - கல்வியமைச்சர்

- ஏ.எச்.ஏ.ஹுஸைன்-

முஸ்லிம் மாணவிகள், பர்தாவைக் கழற்ற வேண்டிய கட்டாயம் இனி இல்லை என, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவையிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கல்வியியல் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நிகழ்வு> ஆரம்பமாகியது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், 

“முஸ்லிம் மாணவிகள், தங்களது கலாசார முறைப்படி பர்தாவை அணியலாம். அவற்றைக் கழற்றி வீசிவிட்டு பாடசாலைகளுக்கு வரவேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. எல்லா சமூகத்தவர்களும், தங்களுக்கே உரித்தான பாரம்பரிய கலாசார பண்பாட்டுச் சிறப்பம்சங்களை பேணிப் பாதுகாத்து, அதன்படி இந்த நாட்டில் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. 

“கடந்த காலத்தில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்களுக்கு இருந்த பல்வேறு அசௌகரியங்களையும், நாம் மாற்றியமைத்துள்ளோம். கடந்தகால அரசாங்கத்தில் இருந்ததைப் போலல்லாது வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்று பிரித்துப் பார்க்காது, பொதுவான கல்விக் கொள்கையை வகுத்து, இன ஐக்கியத்தின்பால் நாம்  செயற்படுகின்றோம். இலங்கையின் கல்வியமைச்சில் முதற்தடவையாக, இன நல்லிணக்க சௌஜன்யப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “இனக்குரோதப் பாகுபாடுகளை இல்லாமல் செய்வதற்காக, விசே‪ட சுற்றுநிரூபங்களை நாங்கள் தயாரித்துள்ளதுடன், அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்குப் பணித்துள்ளோம்.  ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பூரண ஆதரவு எமக்கிருப்பதால், இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது. கல்விக்காக பெருந்தொகையைச் செலவு செய்து, கிழக்கு மாகாணத்தில் கல்வித்தரத்தை உயர்த்தவுள்ளோம். கல்வி முன்னேற்றத்தினூடாகவே இந்த நாட்டில் புதிய  வழியைத் திறக்க முடியும். அந்த வகையில் 3,901 அதிபர்களையும் கல்வி நிர்வாக சேவையில் 852 அதிகாரிகளையும் நியமிக்க முடிந்தது. மேலும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் வளதாரிகளாக,  1,190 உள்வாங்கப்படவுள்ளனர். எதிர்வரும் சமீப காலத்துக்குள், மாகாணப் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் கணக்கிடப்பட்டு, 20,000 ஆசிரியர்கள் உள்வாங்கப்படவுள்ளார்கள். சகல ஆசிரியர்களுக்கும் ஆளுமையை வளர்க்கத் தேவையான பயிற்சிகளை வழங்குகின்றோம். இந்த நாடு ஏனைய உலக நாடுகளுடன் கல்வியில் போட்டி போட்டு முன்னேறுவதற்கான சகல திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன. “5 ஆயிரம் பாடசாலைகளுக்கு கணினிகளை வழங்கவுள்ளதுடன், பிரதான பாடசாலைகளுக்கு 50 கணினிகளை வழங்கும் உத்தேசம் உள்ளது. ‘அருகிலுள்ள சிறந்த பாடசாலை’ திட்டத்தில் 78 பாடசாலைகளுக்கு போதுமான பௌதீக வளங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இந்த வருடத்துக்குள், 45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் காப்புறுதிச் செயற்றிட்டத்தை வழங்கவுள்ளோம். இதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன” என்றார். அவற்றைக் கழற்றி வீசிவிட்டு பாடசாலைகளுக்கு வரவேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. எல்லா சமூகத்தவர்களும், தங்களுக்கே உரித்தான பாரம்பரிய கலாசார பண்பாட்டுச் சிறப்பம்சங்களை பேணிப் பாதுகாத்து, அதன்படி இந்த நாட்டில் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. “கடந்த காலத்தில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்களுக்கு இருந்த பல்வேறு அசௌகரியங்களையும், நாம் மாற்றியமைத்துள்ளோம். கடந்தகால அரசாங்கத்தில் இருந்ததைப் போலல்லாது வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்று பிரித்துப் பார்க்காது, பொதுவான கல்விக் கொள்கையை வகுத்து, இன ஐக்கியத்தின்பால் நாம்  செயற்படுகின்றோம். இலங்கையின் கல்வியமைச்சில் முதற்தடவையாக, இன நல்லிணக்க சௌஜன்யப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “இனக்குரோதப் பாகுபாடுகளை இல்லாமல் செய்வதற்காக, விசே‪ட சுற்றுநிரூபங்களை நாங்கள் தயாரித்துள்ளதுடன், அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்குப் பணித்துள்ளோம்.  என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment