Header Ads



சிங்­கள மக்களே பள்­ளி­வா­ச­ல் மீதான தாக்குதலை, பொலிஸாருக்கு அறி­யப்­ப­டுத்­தி­னர்

பாணந்­துறை பகு­தியில் பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­த­ல் நேற்று முன் தினம் அதி­காலை இடம்­பெற்­றுள்­ளது.

நேற்று முன் தினம்  அதி­காலை 3.00 மணி­ய­ளவில் பள்ளி வாச­லுக்கு பின்­பு­ற­மாக உள்ள யன்னல் வழி­யாக மேல்­மா­டியின் கண்­ணா­டியை உடைத்து பெற்றோல் குண்டு வீசப்பட்டே இந்த தக­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது. இதன் போது பள்­ளி­வா­சலின் மேல் மாடிக்கு செல்லும் படிகள் கடு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ளன. 

குறித்த முஸ்லிம் பள்­ளி­வாசல்  அமைந்­துள்ள பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான  வீடுகள் எவையும்  இல்லை. எனினும் குறித்த பிர­தே­சத்தில் 50 இற்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் வியா­பா­ரஸ்­த­லங்கள் காணப்­ப­டு­கின்­றன. வர்த்­த­கர்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு வருவோர் தொழு­கை­களை நிறை­வேற்றும் முக­மா­கவே இந்தப் பள்­ளி­வாசல் கடை­க­ளி­டையே அமைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பள்­ளி­வா­ச­லுக்கு பின் பக்­க­மாக பாணந்­துறை குப்பை மேடு அமைந்­துள்ள நிலையில் அப்­ப­கு­தியை நோக்கி பள்­ளி­வா­சலில் ஜன்னல் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஜன்­னலே உடைக்­கப்­பட்டு மேல் மாடிக்கு பெற்றோல் பெற்றோல் குண்டு வீசி தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

சம்­பவம் தொடர்பில் குறித்த பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் உள்ள சிங்­கள மக்கள் பொலிஸ் நிலை­யத்­திற்கு தொலை­பேசி மூலம் அறி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்தே பொலிஸார் ஸ்தலம் சென்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.  இந்த சம்­பவம் குறித்தும் பாணந்­துறை பொலிஸார் ஊடாக சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

மத ஸ்தலங்கள் மற்றும் மத விவ­கா­ரங்கள் தொடர்பில் அத்து மீறல்­களை முன்­னெ­டுப்­போ­ருக்கு எதிஒராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அது தொடர்பில் விஷேட விசாரணைகளை  நடத்தவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

2 comments:

  1. இதற்குத்தான் சொல்வது அல்லாஹ்வை மட்டும் பயப்படக்கூடியவர்கள் பள்ளி வாசல்களை பரிபாலனம் செய்ய வீடும் என்று நான் சொல்லவில்லை அல்லாஹ் சொல்கின்றான்.எலிக்கும் பூனைக்கும் பயப்படக்கூடியவர்களை நம்பிக்கை பொறுப்பாளர்களாக வைத்தால் இப்படித்தான் வரும்,பள்ளி வாசல்களில் அரசியல் நுழைந்து நிருவாகம் நடத்த ஆரம்பித்தால் அங்கு அல்லாஹ்வுடைய தக்வா அறவே இருக்க மாட்டாது.வாட்டிக்காரனும் வங்கியில் வட்டிக்கு பணம் எடுத்து வியாபாரம் செய்பவனும் பள்ளியை பரிபாலிக்க எந்த தகுதியும் கிடையாது,

    ReplyDelete
  2. Brother Mustafa. No one is perfect

    ReplyDelete

Powered by Blogger.