Header Ads



முஸ்லிம் பிரதேசங்களில், புத்தரின் சிலைகள், ஜனாதிபதியை விமர்சிக்கும் சர்வதேச அறிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரிடையேயும் இனங்களுக்கிடையேயும், நீடிக்கும் சமாதானமும் கூட்டுறவும் ஏற்படுமெனக் காணப்பட்ட மெல்லிய நம்பிக்கை, ஆபத்தில் காணப்படுவதாக, சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவித்துள்ளது.   

சர்வதேச ரீதியில் முரண்பாடுகளைத் தடுப்பது தொடர்பாக இயங்கும் இந்த அரசசார்பற்ற அமைப்பு, 1995ஆம் ஆண்டு முதல், உலகெங்கிலும் இயங்கி வருகிறது.   இந்நிலையில், இலங்கையின் நிலைமை தொடர்பாக, 34 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை, இக்குழு வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் முதல் 9 மாதங்களில், கணிசமான அடைவுகள் பெறப்பட்ட போதிலும், அதன் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்கள், மெதுவடைந்துள்ளன அல்லது தலைகீழாக மாறியுள்ளன என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டைக் கைக்குள் வைத்திருத்தல் தொடர்பாக, ராஜபக்‌ஷவுடன் போட்டியிட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கும் இக்குழு, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்தத் தேசிய அரசாங்கம் தொடர்பில், விருப்பத்துடன் இருக்கவில்லை என்று தெரிவிக்கிறது. மறுபக்கமாக, ஐ.தே.கவின் செருக்குத் தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின், ஆலோசனைகளை ஏற்காத பண்பு காரணமாகவும், இந்த அமைச்சர்கள், இவ்வாறு காணப்படுகின்றனர் எனவும் கூறுகிறது.   

ராஜபக்‌ஷவின் தேசியவாதத்தால் அச்சமடைந்துள்ள ஜனாதிபதி சிறிசேன, முக்கியமான அரச, நல்லிணக்க வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில், தயக்கம் காட்டுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது, அவரைப் பதவிக்குக் கொண்டுவந்த மக்களின் ஆதரவை இழக்கச் செய்கிறது எனவும் கூறப்படுகிறது.   தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீதான சித்திரவதைகள், வழக்கமாக இடம்பெறும் நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன எனத் தெரிவிக்கும் இந்த அறிக்கை, ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும், இன்னமும் பிரதியீடு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கிறது.   

வடக்கிலும் கிழக்கிலும், பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும், தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில், புத்தரின் சிலைகள் வைக்கப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, இராணுவத்தின் நடவடிக்கைகளைக் குறைக்காமை காரணமாக, வடக்கில் வாழும் தமிழ் மக்களின் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதாகவும், இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவைப் பலவீனமாக்கிவருகிறது எனவும் தெரிவிக்கிறது.    

3 comments:

  1. கடந்த தேர்தலில் நீங்கள் தோல்வி கண்டு மஹிந்த வெற்றி பெற்று இருந்தால்.நீங்கள் எங்கே இருப்பீங்க தலைவா?உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்தது முஸ்லிம்கள்தான்

    ReplyDelete
  2. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே இதுதான் உங்களது நல்லாட்சியா? இனவாதிகளின் நெருக்குதலை கட்டுப்படடுத்தாவிட்டால் நீங்கள் இலங்கையின் வரலாற்றில் மிக மிக மோசமான, ஆட்சியாளரன் என்றப்பட்டதை தவிர வேறேதும் கிடைக்காது. இதுவெ இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதியாகும்.இது உங்களுக்கு வேணுமா?

    අති ගරු ජනපතිතුමනි!

    අපි ඔබගෙන් අහන්ට කෙමති මේකධ ඔබගේ යහපාලනය. රටපුරාම ජාතිවාධිය වපුරනකේධ යහපාලනය. මේක ඔබ තවමත් බලාගෙන ඉන්නවාධ? ඔබ තවමත් මේක අනුමත කරනවානම් ඔබවගේ රජයක්/රජරුවරයක් ඔබහෙර වෙනකවුරුත් අපේ ලංකාවේ ඉතිහාසයන් නොවේ. එහම ඉතිහාසයක් ඔබට කෙමතිනම් ඔබ ඔහොම බලා ඉන්න.

    ReplyDelete
  3. ஜனாதிபதி அவர்களே நீங்கள் படங்காட்டினால் நாங்கள் பாடம் எடுக்கவேண்டிவரும்

    ReplyDelete

Powered by Blogger.