Header Ads



இலவசமாக உணவு பொருட்களை வழங்கவுள்ள சதோச

வௌ்ள நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு வழங்கத் தேவையான, உலர் உணவுப் பொருட்களை லங்கா சதோச நிலையங்கள் மற்றும் களஞ்சிய அறைகளில் இருந்து குறைவின்றி இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் இந்தப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக உதவிப் பொருட்களை கொண்டு சேர்க்கக் கூடிய வசதியை ஏற்படுத்தவே தமது அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எந்தவொரு பிரதேச செயலகத்திற்கும் தேவையான பொருட்களின் அளவு குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சுக்கு, சதோச தலைமையகத்திற்கு அல்லது அருகிலுள்ள எந்தவொரு லங்கா சதோச நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளரின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருட்களை பெற்றுக் கொள்ளும் போது பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.