Header Ads



"தெரியாம திண்டா, நோம்பு முறியாதுதான உம்மா..?"


இன்று (29.05.2017) அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து, என்னோடு ஸஹர் செய்து கொண்டான் இஷான்.
.
காலை எட்டு மணியளவில், உம்மாவிடம் கேட்டான்...,

"தெரியாம திண்டா... நோம்பு முறியாதுதான உம்மா..?"

"இல்ல முறியாது"

சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் உம்மாவிடம் சொன்னான்...

"உம்மா...

இப்ப நான்...

உங்களுக்கும், நானாக்கும்,  தாத்தாகும் தெரியாம வாழப்பழமும், ரொட்டித் துண்டும் திண்ட...

அப்ப எண்ட நோம்பு முறியலதான ....?"

( எம்.எல்.எம். அன்ஸார்)

குழந்தைகளின் உலகம் சுவாரசியமானது.......

2 comments:

  1. நாமும் சிறு பிள்ளையில் ஒரு நாளைக்கு பல நோன்பு பிடித்து இருக்கிறோம் காலை எட்டு ஒன்பது பத்து மணிக்கு திறந்த அனுபவம் யாவருக்கும் உண்டு,ஆனால் சிலருக்கு ஐம்பது வயது தாண்டியும் நோன்பு என்றால் என்ன என்று தெரியாத மூதேவிகளும் நம் சமூதாயத்தில் இப்போதும் இருப்பதுதான் மன வேதனை,

    ReplyDelete
  2. நான் சிறியவன் எனக்கு ஒரு வயது கூடிய எனது நானா இரண்டு பேருக்கும் 5.6 வயது இருக்கும் ஒருநாள் நோன்பு பிடித்துக் கொண்டோம் காலையில் ஏழு மணியழவில் பெரிய தாச்சி சட்டியில் உம்மா பிடித்து வைத்த தண்ணிரில் குழித்துக் கொண்டு இருந்தோம் எனது நானா என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் தம்பி தம்பே உம்மா வாழை மீன் கறி சமைத்து வைத்து இருக்கா நோன்பை விடுவோமாடா அப்போது நான் அல்லாஹ் சுடுவான் என்று சொன்னேன் ,இது ஏழு மணிக்கு எப்படியும் ஒன்பது மணிக்குள் எங்களின் இப்தார் நடந்து முடிந்து விடும் மஹ்ரிப் நோன்பு திறக்கும் நேரத்தில் நாங்கள் இரண்டு பேரும் எல்லோருக்கும் முதல் நோன்பு திறக்க பாயில் இருந்து கொண்டு ஈச்சம் பழச்சண்டையில் ஈடுபட்டு ஒருவருடைய தொப்பியை ஒருவர் கழட்டி சண்டையில் ஈடுபடுவோம் உம்மாவுக்கு சண்டை விலக்கும் வேலைதான் நோன்பு திறக்கும் நேரத்தில்,தற்போது அந்த உம்மா கபுறாளியாக இருக்கிறார்கள்.யா அல்லாஹ் எங்கள் உம்மாவின் பாவங்களை மன்னித்துவிடுவாயாக ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.