Header Ads



தேர்தலுக்குத் தயாராகும்படி, ரணில் வேண்டுகோள்

தேர்தல்களுக்குத் தயாராகும்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிகோத்தாவில் ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கூடுதல் பொறுப்புணர்வுடன் கூடிய கட்சியாக- இளைஞர்களின் பங்களிப்புடன் ஐதேகவை பரந்துபட்ட அளவில் நவீனமயப்படுத்த வேண்டும்.

அமைச்சர்கள் தமது தொகுதிகளில் அதிகளவு நேரத்தைச் செலவிட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து தொகுதிகளில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும்.

எந்த தேர்தலுக்கு ஐதேக தயாராக இருக்க வேண்டும். தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டோ கூட்டணி வைத்துக் கொள்ளாமலோ,  கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

தேசிய அளவிலான தேர்தல்களுக்கு முன்னதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை” என்றும் அவ6ர் கூறியுள்ளார்.

2 comments:

  1. யாரு ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு தான் ஒரே அடி .இலங்கையை பொறுத்தவரையில் அடுத்தது நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஒரு தைரியமான இளைஞரை பிரான்சில் மாதிரி தெரிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. Mahinda's May day crowd has prompted him to speak like this. Now it is too late for UNP to beat Mahinda & Co.

    ReplyDelete

Powered by Blogger.