Header Ads



விகாரை அமைக்கத் தடையா..? பள்­ளி­வா­சல்ககளை அகற்றி, கிழக்­குக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் - சிங்­கள ராவய

எந்தத் தடைகள் வந்­தாலும் எங்­களை சிறையில் அடைத்­தாலும் ஜனா­தி­ப­தி­யினால் எம் மீது எத்­தனை அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டாலும் மாயக்­கல்­லியில் விகாரை அமைத்தே தீரு­வ­தென நாம் உறுதி பூண்­டுள்ளோம்.

அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மினாலோ முத­ல­மைச்­ச­ரி­னாலோ எம்மைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர்  மாகல்­கந்தே சுதந்த தேரர் தெரி­வித்தார். 

மாயக்­கல்லி விவ­காரம் தொடர்­பிலும் எதிர்­கால முன்­னெ­டுப்­புகள் தொடர்­பிலும் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்;

மாயக்­கல்லி பிர­தேசம் தொல்­பொருள் வல­ய­மாக தொல்­பொருள் சட்­டத்தின் கீழ் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மாயக்­கல்லி மலையில் எமது புரா­தன சைத்­திய ஒன்று இருந்­துள்­ளது. அந்த சைத்­தி­ய­வையும் தொல்­பொ­ருட்­க­ளையும் முஸ்­லிம்கள் அகழ்ந்து எடுத்­துள்­ளார்கள். 

தீக­வாபி சைத்­தி­ய மாணிக்கம் களஞ்­சி­யப்­ப­டுத்­து­வ­தற்­காக சிங்­கள மன்­னர்­களால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இத­னாலே இப்­ப­குதி மாணிக்கமடு என தமி­ழர்­களால் அழைக்­கப்­ப­டு­கி­றது. மதத்­த­லங்கள் மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் நல்­லி­ணக்­கத்தை போதிப்­ப­தற்­கா­க­வுமே நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன.

அப்­ப­டி­யென்றால் கிழக்கில் எம்மால் விகாரை அமைக்க முடி­யாதா? கிழக்கில் உள்ள முஸ்­லிம்கள் அங்கு விகாரை அமைப்­பதை எதிர்ப்­ப­தென்றால் அவர்கள் தெற்கில் இருக்கும் பள்­ளி­வா­சல்கள் அனைத்­தையும் அங்­கி­ருந்து அகற்றி கிழக்­குக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 

மாயக்­கல்லி பகு­தியில் விகாரை அமைக்கும் எமது திட்­டத்தை எவ­ராலும் தடுத்து நிறுத்த முடி­யாது. பௌத்த தேரர்கள் நாம் இரத்தம் சிந்­தி­யா­வது விகா­ரையை  நிர்­மா­ணித்தே தீருவோம்.

விகாரை நிர்­மா­ணிப்­பதை எதிர்ப்பதும் தடுக்க முயற்­சிப்­பதும் நல்­லி­ணக்­கத்­தையும் இன நல்­லு­ற­வையும் இல்­லாமற் செய்­வ­தற்கு சம­மாகும். 

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களும் தங்­க­ளது சுய­ந­லத்­திற்­காக அர­சியல் செய்யும் ரவூப் ஹக்கீம் போன்றவர்களுமே விகாரை நிர்மாணிக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விகாரை அமைக்கப்படுவதை எதிர்க்கமாட்டாரென நாம் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

ARA.Fareel + விடிவெள்ளி

1 comment:

  1. முஸ்லிம் அடிப்படை வாதிகள் என்று யாரைத்தான் குறிப்பிடுகின்றார்களோ ?

    மு... ப... .

    ReplyDelete

Powered by Blogger.