Header Ads



ஞானசாரா கைது செய்யப்பட்டால்..?

கடந்த ஒரு மாதத்திற்குள் மாத்திரம் முஸ்லிம்களுக்கெதிராக 17 சம்பவங்கள்.

பகிரங்க மத நிந்தனை தொடர்கிறது…

வெறுப்புப் பேச்சுக்களோடும் நெருப்புத் தணல்களோடும் நாட்டை வலம் வருகிறார்கள் இனவாதிகள்!

காவியுடைக்குள் மறைந்திருப்பது யார்? என்ற கேள்வி நாலா பக்கமும் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயகவை சந்தித்திருக்கிறார்கள். நிலைமையை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் பதிவாகியிருக்கின்றன.

பல வழக்குகளும் நிலுவையிலுள்ளன.

திணறி நிற்கும் அரசாங்கம் விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகிறது என்பதும் கேள்விக்குறிதான்!

ஞானசார தேரர் விரைவில் கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்.

குற்றவாளி யாராக இருந்தாலும் அவரை சட்டத்தின் முன் நிறுத்துவது அசராங்கத்தின் பொறுப்பு.

அதனை அரசாங்கம் சரியாகச் செய்ய வேண்டும் என்பதை முறையாகச் சொல்ல வேண்டியது நம் கடமை.

அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

அப்படி அவர் கைதுசெய்யபடுவாரானால்… நாட்டின் சட்டமும் ஒழுங்கும் இன்னும் சாக(ல)வில்லை என்பதற்கான சான்றாக அமைச்சர் சாகலவின் நடவடிக்கை அமையும்.

அப்படி அவர் கைதுசெய்யபடுவாரானால்… அப்போது நாம் துள்ளிக் குதிக்கலாகாது. குதூகலித்து மகிழ்ச்சியைக் கொப்பளிக்கலாகாது.

சமூக வலைதளங்களில் வெறுப்பூட்டும் வார்த்தைகளை உமிழலாகாது.

கிண்டலையும் குசும்பலையும் அள்ளிக் கொட்டி வெறுப்பு சம்பாதிக்கும் பொறுப்பை யார் தந்தது?

எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கீ போர்ட்டில் வீரம் பேசுவதால் ஆபத்து எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நம் சொந்தங்களுக்குத்தான் என்பது எப்போதும் எம் நினைவில் இருக்கட்டும்!

எதையும் சட்ட ரீதியாக அணுகுவோம்!

இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவோம்!

நேர்வழிக்காக பிரார்த்திப்போம்!

-ஜெம்ஸித் அஸீஸ்-

1 comment:

  1. You are absolutely right. I can remember that when My3 Pala Sirisena was became a President, Some of our Muslims enjoyed extremely high. This has helped to gain support for War hero Malinda Rajapaksa again. Example Asad Sali criticised too much.

    We do not want that happen in relations to Gana Sara.

    ReplyDelete

Powered by Blogger.