May 09, 2017

இது அஸ்மினுடைய விளக்கம்..!

நான் தற்போது வகித்துவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவி மீளழைப்புத் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிடமிருந்து மின்னஞ்சல் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

நல்லாட்சி விழுமிய அரசியலை முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி அறிமுகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை ஸ்தாபிதம் செய்வதில் என்னுடைய பங்களிப்புக்களையும் வழங்கியவன் என்ற ரீதியில், தலைமைத்துவ சபை, அதன் கூட்டான தீர்மானங்களுக்கு கட்டுக்கப்பட்டு நடப்பது மிகவும் அவசியமானது என்பதில் நான் முழுமையான உடன்பாடு கொண்டிருக்கின்றேன். 

ஒரு தீர்மானம்; அது அமுலாகும் சூழ்நிலைகள்; அது மக்களின் மீது செலுத்தக்கூடிய செல்வாக்குகள் குறித்து ஒரு அரசியல்வாதியாக நாம் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது அவசியமாகும். அந்தவகையில் அறிவிக்கப்பட்டிருக்கின்ற தீர்மானம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னமே சமூக வலையத்தளங்களிலும், இணைய ஊடகங்களிலும் இது குறித்து முன்வைக்கப்பட்டுவரும் கருத்துப் பறிமாற்றங்கள் ஆரோக்கியமானவையாக எனக்குத் தோன்றவில்லை. 

குறிப்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் எதிர்காலத்தை சிதைக்கின்ற வகையில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன, 

அத்தோடு என் சார்ந்தும் பல்வேறு தனிப்பட்ட ரீதியிலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

முதலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, குரோதங்களைத் தீர்த்துக்கொள்கின்ற இடமாக இதனை எவரும் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறிக்கொள்வதோடு. இத்தீர்மானம் குறித்த எனது இறுதி முடிவை விரைவில் அறிவிப்பேன், அதற்கான நியாயாதிக்கங்களையும் தெளிவுபடுத்துவேன். அதுவரை வீணான தர்க்கங்களிலிருந்து தவிர்ந்துகொள்வது சிறப்பானது எனத் தாழ்மையோடு அனைத்து அன்பர்களையும் நண்பர்களையும் வேண்டி நிற்கின்றேன். 

அ.அஸ்மின்

- 9-5-2017

8 கருத்துரைகள்:

the believers always obey the leaders. if you can not be obey mean you can not be believer also. all the politician in such a matter doing the same, not obeying the leader. are you believer (faithful Muslim) or not?

you given controversial statement regarding the east and north binding. you trying to keep hold the tail of your post with the support of TNA.

Another division ...this time not in the name of religion but in the name of politics. Politics can turn an angel into devil, a friend into foe and relative into enemy, in politics a day is a too long to see a change..
Do not worry brother...keep faith in Allah and put public interest over your personal one ..put your communtiy first over your personal interest..
Making a decision in poliitcs is important...Tony Blair was a king in British politics he made some trrible mistake and he lost all his fame and popularity with year and now he has a case against him ..
Do not follow hime.
LIVE WITH RESPECT IN POLTICS OR LEAVE IT WITH RESPECT
DO NOT MAKE YOUR LIFE HARD ..
DECIDE WHAT IS GOOD FOR YOUR COMMUNTIY AND YOU WILL BE IN THE HEARTS OF PEOPLE.
DO NOT FOLLOW MUSLIM POLITICIANS ON THIS..

WELL SAID BROTHER ATTEEQ ABU.
YOUR ADVICE - DO NOT FOLLOW MUSLIM POLITICIANS, NEEDS SOME ADDITIONS DEAR BROTHER. CAN I SUGGEST DO NOT FOLLOW THE DECEPTIVE MUSLIM CIVIL SOCIETY AND THE DECEPTIVE ACJU TOO, INSHA ALLAH.
Noor Nizam - Convener "The Muslim Voice".

இவர் என்ன வானிலிருந்து இறங்கிய அஅரசியல்வாதியாவாதியா ?பொதுமக்களை ஏய்த்து பணம் புகழ் தேடும் பச்சோந்தி அரசியல்வாதி என்பதை நிரூபிக்க துணிந்துவிட்டவர்தான் என்பது அவர் வெளியிடவுள்ள அறிக்கையில் தெரியவரும்.
அவர் பக்க நியாயாதிக்கம்பற்றி குறிப்பிடப் போறாராம். பத்தோடு பதினொன்றாக இவரையும் இந்தச் சாக்கடையில் டயஸ்போறாக்களின் பணம் தள்ளியிருக்கும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி யதார்த்தத்திற்கு உதவாத ஒரு கட்சியாக மாறி வருகின்றது. வடக்கில் உள்ள சூழலை புரிந்துகொள்ளாமல், தமது கிழக்கு அரசியலை மையப்படுத்தி, வடமாகாண முஸ்லிம் தமிழ் மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயங்கள் தோன்ற வழி ஏற்படுத்துகின்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு இன்று உள்ளே ஒரே ஒரு உறுப்பினர் அஸ்மின் அவர்கள் மட்டுமே. இவரைத் தவிர இன்று அந்தக் கட்சிக்கு ஒரு நகரசபை உறுப்பினரோ, மாகாண சபை உறுப்பினரோ கூடக் கிடையாது. அஸ்மின் அய்யூபின் பதவி கூட அந்தக் கட்சிக்குக் கிடைத்த மக்கள் அங்கீகாரத்தில் வெல்லப்பட்ட பதவியே அல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கின் தமிழ், முஸ்லிம் உறவின் வெளிப்பாடாக தியாகம் செய்த தமிழரின் வாக்கில் கிடைத்த பதவி மட்டுமே. எவ்வித வெற்றிபெற்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்காத ஒரு கட்சி, யாரோ தமிழ் மக்களின் புண்ணியத்தில் கிடைத்த போனஸ் ஆசனத்தை வைத்துக்கொண்டு மேஜிக் காட்ட முயல்வது வெட்கக் கேடானது.

அய்யூப் அஸ்மின் அவர்களின் சாலச்சிரந்த அறிக்கை ஒரு உண்மையான அரசியல் வாதியின்
நிலைப்பாடு இதுதான்

Yes you are right it is given job..so he should have some respect for people who gave him this post ...
East and North have different political problems you can not solve north Muslim problems by Eastern way ..
So let him do what is best for norh Munlim..Hakeem have been ruling eastern Muslim while he is in South ? What a joke...while eastern Muslims do not think about it...He is most useless politician today..

Post a Comment