May 24, 2017

பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்­களை, கட்­டுப்­ப­டுத்த சிறப்புத் திட்டம்

முஸ்­லிம்­களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்­க­ளது வர்த்­தக நிலை­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களும், தீ வைப்புச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்று வரும் நிலையில் அவ்­வா­றான சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த விசேட திட்­டத்தை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

ஒவ்­வொரு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியும் தங்­களின் பொலிஸ் பிரிவில் இடம்­பெறும் இவ்­வா­றான வழிபாட்டுத் தலங்கள், வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் இன ரீதி­யி­லான செயற்­பா­டுகள் தொடர்பில் பொறுப்புக் கூறும் வித­மாக இந்த திட்­டத்தை அமுல் செய்ய சாகல ரத்­நா­யக்­க­வுக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்ளார். 

அதன்­படி உட­ன­டி­யாக குறித்த விடயம் அமுல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதனை விட  சட்­டத்தை கையி­லெ­டுத்து செயற்­படும் அனைத்து தனி நபர்­க­ளுக்கும் எதி­ராக பாரா­பட்­ச­மின்றி கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன சாக­ல­வுக்கு உத்­த­ர­விட்டார்.

ஜனா­தி­பதி தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் போதே இந்த உத்­த­ர­வு­களை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இதேவேளை இனவாத மதவாத செயற்பாடுகள், வழிபாட்டு நிலையங்கள் மீதான செயற்பாடுகளை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஊடாக பொலிஸாருக்கு விஷேட ஆலோசனைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

4 கருத்துரைகள்:

So no punishment for what ever happened.. No investigation, No arrest of the racist monk even after open evidence of his hate speech and actions ?

Thanks to God who help us first and then to any world institution/s who forced our President and Prim minister to act, who were sleeping all these days and showed a blind eye on the racist monk and his group.

He should resign his duty or President should kickout him.

ITHUKU IPPADITHAN SINHALA BASALA SOLLAWANUM ***BAMBUWA***

Muslim Economic expansion is the clear target !

Post a Comment