May 17, 2017

நல்லிணக்க அமைச்சில் ஞானசாரா அட்டகாசம், முறையற்ற சொற் பிரயோகம்

'இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?' என ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி கேட்க அதற்கு அமைச்சர், 'தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..' என பதிலளிக்க முற்பட்டபோது இடைமறித்த தேரர், 'இல்லை இல்லை இந்த நாடு யாருக்கு சொந்தமானது?' என கேட்க, அமைச்சர் 'இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்று கூற முற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற சொற்களை பாவித்து இந்த நாடு பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று தெரியாமல் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்து முடியும் என்றார்.

பிரச்சினை தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் கதைக்காமல் வீட்டில் கூலிக்கு இருப்பரிடம் கதைப்பது எவ்வாறு நியாயமாகும். இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. வந்து குடியேறிய தமிழ், முஸ்லிம்களே எங்கள் மொழி, எமது கலாசாரம் வரலாறு என்பவற்றை அறிந்துகொள்ள வேண்டும். சிங்கள மொழியை இவர்களே கற்றறிய வேண்டும். அதைவிடுத்து நாங்கள் எதற்காக தமிழை கற்க வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் இனவாதமாக பேசினார்.

மேலும் இந்த அமைச்சு பதவிக்கு நீங்கள் தகுதியற்றவர் எனவும் தேரர் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் மிகவும் பொறுமையான முறையில் பதிலளித்தார்.

இன்று முற்பகல் இராஜகிரியவில் உள்ள அமைச்சர் மனோ கணேசனின் காரியாலயத்துக்குள் நுழைந்த ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினேரே இவ்வாறு முறையற்ற தனமாக நடந்துள்ளனர்.

7 கருத்துரைகள்:

நல்லாட்சியில் சட்டம் சாகிறது, விரைவில் செத்துவிடும் போலுள்ளது.

He should be taught a good lesson.

who gave him such a rights to enter to the ministry and argue with the minister? Mano should get strict action for this issue.

ஏன்டா இவனயைல்லாம் கூப்பிட்டு வைத்து கதைக்கின்றிர்கள்

Stinking Srilankan corrupt politics and all corrupt
religions are strictly responsible for the tension
among communities. Who let loose religions to do
politics ? Why politicians keep teaching virtues on
every platform of politics ? Why can't they still
understand the difference between the job a donkey
and the dog ? Why are donkeys trying to bark and
dogs are still sleeping while thieves are thieving ?
Will the country soon become a perfect failed state ?
Is GNANASARA licenced to talk loudly what the leaders
can not talk on platforms ? Sinhala Buddhists
rejected Gnanasara in election ! Is that not good
enough for the rulers to deal with him firmly ?
We have a UNP + SLFP government running with the
support of minorities , especially Muslims . We
don't have to care about the internal problems of
SLFP as we have more issues of almost daily
harassment at the hands of extremist Buddhist
elements. It keeps us under constant pressure .
Present govt can defeat it . But it is not
interested . If the govt can effectively deal
with the protest in Hambantota and determined
to deal with similar situations , why not this
man Gnanasara ? Sinhala people don't care
if he is punished !

My3 & Ranil should commit suicide immediately.

என்னை பொறுத்தவரை மனோ கணேஷ் ஒரு கல்லவிதகமையில்லாதவர் அவரின் பேச்சியில் ஆரம்பமுமில்லை முடிவுமில்லை.தீவிரவாதி தேரர் இலங்கை சிங்கள மக்களின் நாடு என்று பேசும்போதே அவருக்கு சொல்ல இருந்திச்சி நாங்கள் எல்லோரும் வெளிநாட்டில்லிருந்தே வந்தவர்களென்று அவ்வாறு சொல்லாமல் ஞானசார பேசும் போது இவரு சும்மா மேலே பார்த்து கொண்டு இருந்தாரு எது எப்படியோ அவன் வந்தான் சொல்லவேண்டியது சொன்னான் போனான் அது தான் உண்மை.

Post a Comment