Header Ads



ஜனாதிபதியின் நியமனங்களுக்கு, ரணிலின் மனைவி அதிருப்தி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணியாக 25 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெண் சட்டத்தரணிகள் எவரும் இல்லை என்று திருமதி மைத்திரி விக்ரமசிங்கவினால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்கள் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதில் இணைக்கப்பட்டோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினாலேயே பட்டியலிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நியமிப்பில் கட்சிக்கு ஆதரவு வழங்கும் தகுதி அடிப்படையில் மாத்திரம் நியமிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சில சட்டத்தரணிகள் வழக்குகள் அற்றவர்கள் எனவும், அவர்கள் செயற்பாட்டு சட்டதரணிகள் அல்ல எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் சட்ட கல்லூரிகளில் அதிகளவான பெண் சட்டத்தரணிகளே உருவாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான சூழலில் ஜனாதிபதி சட்டத்தரணி நியமனத்தின் போது பெண்களுக்கு சமமான இடம் வழங்கப்படவில்லை என பெண் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை கடந்த மே தின பேரணியில், சமகால அரசாங்கதில் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் கருத்து வெளியிடப்பட்டது. எனினும் சட்டத்துறையில் அவ்வாறான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என பெண் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. பெயர் சொல்ல ஒரு பிள்ளை இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?

    ReplyDelete

Powered by Blogger.