Header Ads



மியன்மார் முஸ்லிம்களை திருப்பி அனுப்பாதே - முஸ்லிம் சட்டத்தரணிகள் களத்தில் குதிக்கிறார்கள்


-AAM. Anzir-

காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட  32  மியன்மார்  முஸ்லிம்களையும் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பலாகாது என வலியுறுத்தவும், அவர்களுக்கு இலவச சட்ட உதவியை வழங்குவதற்காகவும்   முஸ்லிம் சட்டத்தரணிகள் கொண்ட குழுவொன்று யாழ்ப்பாணம் விரைந்துள்ளதாக மூத்த சட்டத்தரணி சிராஸ் நுர்தீன் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையிலுள்ள UNHCR, IOM பிரதிநிதிகளும் நாளை செவ்வாய்கிழமை -02- யாழ்ப்பாணம் சென்று கடலில் மீட்கப்பட்ட மியன்மார் சகோதரர்களின் நலன்களை கவனிப்பார்கள் என மற்றுமொரு மூத்த சட்டதர்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.

மேலும் இவர்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால் ஏற்படும் பயங்கர நிலையை கவனத்திற்கொண்டு, அதனை தடுப்பதற்கான அத்தனை சட்டரீதியான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுமெனவும் ருஸ்தி   ஹபீப்  மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. இலங்கையிலிருந்து உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கு மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்து குடிபெயர்ந்து வாழ்கிறார்கள் அப்படியென்றால் ஏன் இலங்கைக்கு வரும் அகதிகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் ??இந்த பர்மா அகதிகள் எல்லோரும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மனிதாவிமான உதவிகளை செய்ய வேண்டும்!

    ReplyDelete
  2. இதுவரைக்கும் இலங்கையில்ந்து மற்ற நாடுகளுக்கு தஞ்சம் கூறி சென்றவர்களை திருப்பி அனுப்பி இருந்தால் என்னவாயிறுக்கும் என்று நினைத்து பார்த்தால் எல்லாம் புரியும்

    ReplyDelete

Powered by Blogger.