Header Ads



முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்வது, பெரும்பான்மை சமூகத்துடன் மோதலுக்கு வழிவகுக்குமா..?

தற்போது நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்திலுள்ள தீவிரவாத எண்ணம் கொண்ட ஒரு சிலரால் முஸ்லிம்களுக்கெதிராக சட்டத்தை மீறிய வகையில் மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகள் முஸ்லிம்களின் மனதை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை பொறுமையுடனும், தீர்க்கதரிசனத்தடனும் எதிர்கொள்ள வேண்டியது முஸ்லிம்களது பொறுப்பாகும்.

இந்நிலையில் ஹர்த்தால்களை ஏற்படுத்தி பெரும்பான்மை சமூகத்துடன் மோத நினைப்பது முஸ்லிம்களுக்கு மேலும் விபரீதமான விளைவுகளையே ஈட்டித்தரும். ஆகையால் இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து கல்விமான்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தவிர்ந்து கொள்ளுமாறு அம்பாரை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் மௌலவி ஏ.எல்.நாஸிர்கனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் மேலும், பெரும்பான்மை சமூகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட தீவிரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கெதிராக எம்மால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் எமக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத்தந்துள்ளன. ஆகவே நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுகளும் எமது முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களில் அழிவுகளையும், வன்முறைகளையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

இதுவிடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சம்பந்தப்பட்ட அரசியல் தலைமைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இனவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாகவுள்ளது. 

இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஐவேளை தொழுகையிலும் குனூத் ஓதி இருகரம் ஏந்தி பிராத்திக்குமாறும், இனவாதத்தை தூண்டும் வீணான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.