Header Ads



ஹர்த்தால் என்பது, பிசிபிசுத்துப் போன செயற்பாடாக அமையக் கூடாது..!

-Mohamed Naushad-

முஸ்லிம்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாத்வீகமான சில எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் வழமையாக கடைசி நேரத்தில் தலையிடும் மேதாவிகளின் தலையீட்டாலும் அவர்கள் வழங்கிய சில கடைசிக்கட்ட வழமையான உத்தரவாதங்களாலும் குறைந்த பட்ச எதிர்ப்பு நடவடிக்கையும் தற்போது கைவிடப்பட்டுள்ளது. 

ஆனால் நிலைமை சீரானதாகத் தெரியவில்லை. 

பட்டப்பகலில் ஒரு முஸ்லிம் வர்த்தக நிலையத்துக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாம். 

எனவே குறைந்த பட்சம் ஒரு ஹர்த்தாலை செய்தாவது முஸ்லிம்கள் இந்த அரசின் கையாலாகா தனத்துக்கு எதிராக தமது அதிருப்தியை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ஆனால் கைவிடப்பட்ட ஹர்த்தாலை மீண்டும் செய்வதாயின் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஹர்த்தால் என்பது வெறுமனே அங்கும் இங்கும் சில கடைகளையும் வர்த்தக நிலையங்களையும் மட்டும் மூடும் பிசிபிசுத்தப் போன ஒரு செயற்பாடாக அமையக் கூடாது. 

மாறாக முஸ்லிம் சமூகத்தின் முழு பலத்தையும் வெளிக்காட்டுவதாக அது அமைய வேண்டும். அன்றைய தினம் முஸ்லிம் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களை புறக்கணிக்க வேண்டும். வைத்தியர்கள் ஆஸ்பத்திரிகளை புறக்கணிக்க வேண்டும். பொறியியலாளர்கள் கணக்காளர்கள் அரச மற்றும் தனியார் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக தமது கடமைகளை பகிஷ்கரிக்க வேண்டும். ஆசிரியர்கள் அதிபர்கள் பல்கலைக்கழக வரிவுரையாளர்கள் தனியார் கல்வி பிரிவினர் என எல்லா துறை சார்ந்தவர்களும் ஒரு நாள் ஒதுங்கி இருக்க வேண்டும். 

ஆட்டோ ஓட்டுபவர்கள் மேசன் வேலை செய்பவர்கள் என எல்லோரும் விலகி நிற்க வேண்டும். முஸ்லிம் ஹோட்டல்கள் கூட இழுத்து மூட ப்பட வேண்டும். இது வரை இந்த நாட்டில் நடைபெற்றிராத ஒரு ஹர்தாலாக அது அமைய வேண்டும். இப்படி ஒன்றை எம்மால் செய்ய முடியுமா. ஓரு சில இடங்களில் ஒரு சில கடைகளை மட்டும் மூட வைக்கும் பிசுபிசுத்துப் போகும் ஹர்த்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை

3 comments:

  1. Particularly Every one must participate to show our unity n strength.

    ReplyDelete
  2. Yes absolute truth. Each and every Muslim must participate.

    ReplyDelete

Powered by Blogger.