Header Ads



ஹிஸ்புல்லாஹ் ஒரு யுகப் புருஷர் - பொலன்னறுவை மக்கள் நன்றி தெரிவிப்பு

யுத்தத்தினால் தமது சொத்துக்களையும், வீடுகளையும் இழந்து தவித்து வந்த பொலன்னறுவை மற்றும்  மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைக்கிராமங்களில் வாழ்ந்த மக்களின்  பிரச்சினைக்குத் தீர்வாக, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் பள்ளித்திடல், பங்குராணை பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டமொன்றை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் எம்.பஸீர் அஹமட் பாராட்டுக்களையும் - நன்றிகளையும் தெரிவித்துள்ளார். 

இராhஜாங்க அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாட்டங்களின் எல்லைப் பிரதேசங்களில் காணப்படும் பல முஸ்லிம் கிராமங்களில் கடந்த கால பயங்கரவாத நடவடிக்கைகளால் வெகுவாகப் பாதிக்கப்ட்டு சொத்துக்கள் மட்டுமல்ல உயிர்கல் பலவும் காவு கொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வுகளை மறந்துவிடாத அரசியல் தலைவர்களில் தாங்கள் பிரதானமான ஒருவர் என்பதை நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் அறிவர். அந்த வகையில் தாங்கள் ஒரு யுகப் புருஷர் என்பதை நாங்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். 

அரசியல் வாதிகளால் முற்றாக புறக்கணிக்கப்பட்டு அரச நிறுவனங்களினதோ, அரச சார்பற்ற நிறுவனங்களினதோ எவ்வித உதவிகளும் இல்லாத குறித்த எல்லைக் கிராம மக்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள வழியில்லாது அரசியல் அனாதைகளாக வாழ்ந்து வருகின்றனர். 

அப்படிப்பட்ட மக்களின் துயர் துடைக்க அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக பள்ளித்திடல், பங்குராணை பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டமொன்றை அமைத்துத் தந்தமை பொலன்னறுவை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும். தாங்கள் வாழ்கின்ற மாவட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றி வைப்பதற்காக அயராது பாடுபடுகின்ற நீங்கள் எமது மாவட்ட மக்களையும் கவனத்தில் கொண்டு இவ்வாறான பாரிய செயற்திட்;டமொன்றை  மிகச் சிறப்பாக செய்து முடித்தமைக்காக முதலில் அல்லாஹ்விற்கும், அடுத்ததாக தங்களுக்கும், தங்களின் ஹிரா பௌண்டேஷன் குழுவினருக்கும், பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1 comment:

  1. Alhamdhulillah ! May almighty Allah acknowledge this praiseworthy deed & reward him here and afterlife.

    ReplyDelete

Powered by Blogger.