Header Ads



நல்லாட்சிக்கு பேரதிர்ச்சி, பலத்தை நிரூபித்த மஹிந்த - (புலனாய்வுத் தகவல் வெளியாகியது)


சர்வதேச தொழிலாளர் தினத்தை, உலக நாடுகளில் உழைக்கும் மக்கள் நேற்று  கொண்டாடினர். தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அப்பால் அரசியல் பலத்தை நிரூபிக்கும் வகையில், இலங்கையின் பல பாகங்களில் மேதின கூட்டங்களும் பேரணிகளும் நேற்று நடைபெற்றன.

நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பிரதான நகரங்களில் தமது மேதின கூட்டங்களை நடத்தியிருந்தன.

சமகாலத்தில் மக்களின் ஏகோபித்த செல்வாக்கினை கொண்டுள்ள கட்சி தாம் என நிரூபிக்கும் வகையில், பிரமாண்டமான முறையில் மேதின பேரணிகள் நடைபெற்றன.

நேற்று நடைபெற்ற மேதின கூட்டத்தினை அடுத்து மக்களின் ஆதரவு நிலை தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகள் மீதும் மக்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் நடைபெற்ற மே தின பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைய, காலிமுகத்திடலுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் என தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணியில் கலந்து கொண்டவர்களின் எணணிக்கை சுமார் 65 ஆயிரம் பேராகும்.

கண்டி கெட்டம்பேயில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேதின பேரணியில் சுமார் 58 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்ட போது பலத்த மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்முறை மேதின கூட்டங்களில் அதிகளவான மக்களை ஒன்றிணைந்து, நல்லாட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அவர் கூறியது போன்று சாதகமான நிலைப்பாடு ஒன்றை வெளிப்படுத்தியுள்ளதாக நேற்றைய மேதின கூட்டம் அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு நிலை சமகால அரசாங்கத்திற்கு பாதகமான நிலையை காட்டுவதுடன், மஹிந்தவின் மற்றுமொரு அரசியல் பயணத்திற்கான சிறந்த ஆரம்பமாக இது அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, கிராமபுறங்களில் போர் வெற்றி வீரரான மஹிந்தவுக்கு இன்றும் பலத்த ஆதரவு உள்ளது. இதனை பயன்படுத்தி அவர்களுக்கு பெருந்தொகை பணம் மற்றும் மதுபானங்கள் வழங்கப்பட்டு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

4 comments:

  1. Money can do more than this

    ReplyDelete
  2. Government should have seize MR's looted amount then you will not see this crowd again around him or his offspring

    ReplyDelete
  3. The lethargy of the present govt gathered this masses.
    It's time to wakeup

    ReplyDelete
  4. Yahapalanaya Jokers have given the priority to build their own party rather than building the country. Outcome is this.. and no more provincial election....next leader is determined.....

    ReplyDelete

Powered by Blogger.