Header Ads



வட மாகாண சபை, போனஸ் ஆசனம்..!

2013 ஆம் ஆண்டு முதல் தடவையாக நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கெளரவ அய்யூப் அஸ்மின் அவர்கள், அதே கட்சியால் போனஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தற்பொழுது அவர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கை அவரை நியமித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து அல்லாமல், வடமாகாணத்துடன் நேரடியாக அறிமுகமற்ற ஒரு தரப்பிடம் இருந்து கிளப்பப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகும் செய்திகள், கருத்துக்களை அடியொற்றி விடயத்தின் யதார்த்தத்தை நோக்குவோம்.

இலங்கையில் முஸ்லிம்கள் பல மாவட்டங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்கு என்று தனித்தனியான அடையாளங்கள் இருப்பதற்கு, அவர்கள் பேசும் தமிழ் மொழியில் உள்ள பேச்சுவழக்கு வேறுபாடே சிறந்த சாட்சி ஆகும். 1990 இல் நடைபெற்ற நிகழ்வுகளை நோக்கினால், முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பிரச்சினையின் வடிவத்தில் வடக்கிற்கும், கிழக்கிற்கும் பாரிய வேறுபாடு இருப்பதை கண்டுகொள்ளலாம். சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றை கருதும்பொழுது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழரும், முஸ்லிம்களும் மிகவும் நெருக்கமான உறவுடனேயே வாழ்ந்து வந்துள்ளனர். 1990 இல் கிழக்கில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கும், வடக்கில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. வடக்கில் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிக் குண்டுகள் எந்த ஒரு முஸ்லிமை நோக்கியும் பாய்ந்திருக்கவில்லை, ஆனால் கிழக்கின் நிலைமை மோசமானதாக இருந்தது.

வடக்கில் நிலவிய தமிழ் முஸ்லிம் நட்புறவில் ஏற்பட்ட விரிசலை ஈடுகட்ட, தமிழ் மக்களின் இன்றைய ஏக பிரதிநிதிகள் என்று சொல்லப்படக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கெளரவ சட்டத்தரணி இமாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்றத் தேசியப் பட்டியல் பதவி மற்றும் கெளரவ அஸ்மின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணசபை போனஸ் ஆசனம் ஆகியவையும் அந்த முயற்சிகளிலே அடங்கும்.

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு நல்லிணக்கம், மீள்குடியேற்றம் ஆகியவற்றிற்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை இயக்கிவந்த கெளரவ அஸ்மின் அவர்களுக்கு, தமிழ் – முஸ்லிம் உறவின் நல்லிணக்க வெளிப்பாடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போனஸ் ஆசனம் ஒன்றை வழங்க முன்வந்தது. கெளரவ இமாம் அவர்கள் நீண்டகாலமாக தமிழரசுக் கட்சி உறுப்பினராக இருந்த காரணத்தால் அவருக்கான பாராளுமன்ற ஆசனம் கூட்டமைப்பின் மூலம் இலகுவாக வழங்கப்பட முடியுமாக இருந்தது, எனினும் அஸ்மின் அய்யூப் கட்சி அரசியலில் ஈடுபட்டு இருக்காத காரணத்தால், அவரின் சார்பில் முஸ்லிம் தரப்பில் த.தே.கூ. உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான தேவை ஏற்பட்டது. 

யாழ் முஸ்லிம் சமூகத்தில் காணப்பட்ட ஒழுங்கமைக்கப்படாத தன்மை, தலைமைகளுக்கிடையிலான ஒற்றுமையின்மை மற்றும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் செயலற்ற தன்மை காரணமாக, தனது நளீமியா தொடர்புகள் மூலம் PMGG என்னும் காத்தன்குடியை மையமாகக் கொண்ட அதிகம் அறியப்படாத கட்சி ஒன்றை காட்சிக்குள் கொண்டுவரும் தேவை கெளரவ அஸ்மின் அவர்களுக்கு ஏற்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், குறித்த தருணம் வரையும் கூட அஸ்மின் அவர்கள் PMGG யின் உறுப்பினராக இருக்கவில்லை என்பதாகும்.

மேலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட PMGG கட்சியினர் கிழக்கில் த.தே.கூ இனரை எதிர்த்து வேறு கட்சிகளிலேயே தமது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர் என்னும் விடயமும் சமூக ஊடகங்களில் சுட்டிக் கட்டப் பட்டுள்ளது. ஆக, த.தே,கூ இனருக்கும் PMGG இனருக்கும் இடையில், போனஸ் ஆசனம் ஒன்றை த.தே,கூ வழங்குகின்ற அளவிற்கு நட்புறவோ, PMGG இற்கான அங்கீகாரமோ இல்லை என்பதையும், வடமாகாண சபை போனஸ் ஆசனம் வடமாகாண முஸ்லிம் மக்களுக்காக வழங்கப்பட்டது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

தேசிய அளவில் மட்டுமல்ல, பிரதேச அளவில் கூட மக்களால் பெரிதாக பொருட்படுத்தப்படாத கட்சியான PMGG இதுகால வரை பெற்றுக்கொண்டதெல்லாம் ஓரிரு நகர சபை உறுப்பினர் பதவிகள் மட்டுமே. ஆக அந்த நகரசபை உறுப்பினர் பதவிகளை வைத்தாவது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, ஒரு பீங்கான் சோற்றை பத்துப் பேர் சாப்பிட்ட கதையாக மாறி மாறி பலபேருக்கு அவர்கள் தங்கள் சுய தீர்மானத்தின் படி வளங்கினர்களே தவிர, அது ஜனநாயக அரசியலினதோ, நல்லாட்சி அரசியலினதோ ஒரு பண்பு அல்ல. அத்துடன் சுழற்சி முறைப் பதவி என்று பத்துப் பேருக்கு ஒரு பதவியை பங்கிடுவது நிர்வாக மட்டத்தில் நோக்குமிடத்து சாத்தியமற்றதும் ஆகும். ஆறு மாதத்திற்கு ஒரு பிரதமர், மூன்று மாதத்திற்கு ஒரு அமைச்சர் என்று ஆகிவிட்டால் நாடு அதள பாதாளத்திற்குத்தான் செல்லவேண்டி இருக்கும். ஆகவே PMGG காத்தான்குடி நகர சபையில் சுயேச்சை உறுப்பினர்களுக்கு செய்த அதே வேலையை, தேசிய மட்டத்தில், மாகாண ஆளும்தரப்பு மட்டத்தில் செய்ய முயல்வது கேலிக்கூத்து ஆகும்.

வடமாகாண முஸ்லிம்களுக்காக த.தே.கூ. வழங்கிய பதவியை, காத்தன்குடியை மையப்படுத்திய PMGG கட்சியினர், தமது சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக பகடைக்காயாக பயன்படுத்த முற்பட்டுள்ளமை வடக்கின் தமிழ் முஸ்லிம் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகும். எனினும் இது குறித்து PMGG கிஞ்சித்தும் கவனம் செலுத்தவோ, வடமாகாண தமிழ் முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி கருத்துக் கேட்கவோ இல்லை.

PMGG மற்றும் ததே.கூ இடையேயான ஒப்பந்தத்தை நோக்குமிடத்து, மன்னாரில் போட்டியிடும் வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடையுமிடத்து அவருக்கு போனஸ் ஆசனம் ஒன்று வழங்கப்படும் என்ற அமைப்பில்தான் அது அமையப் பெற்றுள்ளதே தவிர, PMGG கட்சி சொல்லுகின்ற நபர்களுக்கெல்லாம் ஆசனம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. அதற்கு மேலதிகமாக, கெளரவ அஸ்மின் அவர்கள் பதவி விலகினாலும், அந்த வெற்றிடம் தேர்தல் சட்டங்களின் படி, வடமாகாண சபைக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இன்னொரு வேட்பாளரைக் கொண்டே நிரப்பப்பட வேண்டுமே தவிர, PMGG சொல்லுகின்ற ஒருவரின் மூலம் அல்ல என்பதையாவது PMGG யினர் அறிந்து வைத்துள்ளனரா என்பது ஆச்சரியமே.

PMGG (தற்பொழுது NFGG) அமைப்பினர் தமது சுயலாபத்திற்காக, ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயுள்ள வடமாகாண முஸ்லிம்களை, குறிப்பாக யாழ் முஸ்லிம்களை விளையாட்டுப் பொருளாக கருதுவதை தவிர்த்துக் கொள்வதே நல்லது. 

- சுவைர் மீரான்-

9 comments:

  1. அஸ்மின் அய்யூப் அவர்கள் 2012 ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் நினைவுப் பேருரை ஆற்ற TNA யாழ் அழைக்கப்பட்டு இருந்தார். TNA - அஸ்மின் உறவானது GG கட்சிகள் மூக்கை நுழைப்பதற்கும் முன்னரான, பழமையான உறவு. அதையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    TNA யாழ் முஸ்லிம்களுக்கு வழங்கிய போனஸ் ஆசனத்தை பெற்றுக்கொள்ள, அட்றஸ் இஸ்லாமல் இருந்த GG கட்சிகளுக்கு, தனது பழைய நட்புக்கலான ஜமாத்தே இஸ்லாமி - நளீமி நல்லுறவிற்காக அவர்களை கொண்டுவந்து அரசியல் அறிமுகம் பெற்றுக்கொடுத்த நன்றியுணர்வை மறந்து, இன்று துரோக நிலைக்கு GG கட்சிகள் மாறியுள்ளன.

    அஸ்மினை விட்டால், இன்றைக்கு இந்த GG கட்சிகளுக்கு யாராவது ஒரு உறுப்பினராவது இருக்கின்றாரா? எந்த மாகாண சபையிலோ, பாராளுமன்றத்திலோ எங்கேயும் இல்லை. ரோட்டில் போற பாம்பைப் பிடித்துமடிக்குள் போட்ட கதைதான் அஸ்மினுக்கு.

    ReplyDelete
  2. This is not the core issue. What is brother Azmin's stand with respect to North East Merger? If yes can a party based in East support him?

    ReplyDelete
  3. அஷ்மின் NFGG ஊடாகவே தே.ப. ஆசனத்தைப் பெற்றார். அவர் TNA ஊடாக போட்டியிடவில்லை. NFGG ஊடாகவே போட்டியிட்டார். தேர்தலுக்காக ஒரு கட்சியோடு ஒப்பந்தம் செய்வதால் அந்தக் கட்சியோடு கரைந்து போவதாக இல்லை. கடந்த காலத்தில் NFGG SLMC உடனும் கூட்டுச் சேர்ந்தது அதற்காக SLMC யுடன் கரைந்து போய்விட வில்லை. அஷ்மின் சரியான மனிதன் எனின் NFGG குரிய பதவியை விட்டு விலகுவதே தார்மீகம்.அரசியலில் இதுவெல்லாம் சகஜம்.

    ReplyDelete
  4. மீடயாக்களால் ஆட்சியை நிலைநிறுத்தவும் முடியும் மாற்றியமைக்கவும் முடியும் என்பதனை தழுவியதுதான் இப்பத்தியும்.
    மொசாட் மற்றும் சிஐஏ யின் மூளைச்சலவைக்கு உட்பட்டு லொஜிகலாக பிரதேசவாதத்தை ஊடறுத்து அஸ்மினுக்கு வக்காளத்து வாங்கியருக்கிறார்.
    முஸ்லிம்களை ஏக உம்மத் என்ற குடைக்குள் கொண்டுவர படாதபாடுபடும் நிலையில் இன்னும் ஒரு சாத்தான் பிரசவித்துவிட்டதோ?

    ReplyDelete
  5. ஆதம்லப்பைக் காக்கா, NFGG க்கு பதவி கொடுக்கப்பட்டதாக TNA ஒப்பந்தத்தில் இருந்து ஒரு வரியைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

    வடமாகாண முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட போனஸ் ஆசனத்தை கொள்ளையடிக்கப் பார்க்கின்றது காத்தான்குடியின் GG கட்சி.

    முட்டாள்தனமாக பேசக் கூடாது, அஸ்மின் தேர்தலில் போட்டியிடும் பொழுது NFGG என்று ஒன்று இருக்கவே இல்லை.

    ReplyDelete
  6. லாபிர், நீங்கள் சொல்வது உண்மை என்றால், முதலில் இந்த GG கட்சி வீணான பிரச்சினையை உண்டாக்காமல், யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடாமல் இருந்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. இது அஸ்மின் அயூப் வட்ஸ்அப் இல் பதிவிட்ட செய்தி
    "நான் தற்போது வகித்துவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவி மீளழைப்புத் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிடமிருந்து மின்னஞ்சல் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சி விழுமிய அரசியலை முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி அறிமுகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை ஸ்தாபிதம் செய்வதில் என்னுடைய பங்களிப்புக்களையும் வழங்கியவன் என்ற ரீதியில், தலைமைத்துவ சபை, அதன் கூட்டான தீர்மானங்களுக்கு கட்டுக்கப்பட்டு நடப்பது மிகவும் அவசியமானது என்பதில் நான் முழுமையான உடன்பாடு கொண்டிருக்கின்றேன். ஒரு தீர்மானம்; அது அமுலாகும் சூழ்நிலைகள்; அது மக்களின் மீது செலுத்தக்கூடிய செல்வாக்குகள் குறித்து ஒரு அரசியல்வாதியாக நாம் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது அவசியமாகும். அந்தவகையில் அறிவிக்கப்பட்டிருக்கின்ற தீர்மானம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னமே; சமூக வலையத்தளங்களிலும், இணைய ஊடகங்களிலும் இது குறித்து முன்வைக்கப்பட்டுவரும் கருத்துப் பறிமாற்றங்கள் ஆரோக்கியமானவையாக எனக்குத் தோன்றவில்லை. குறிப்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் எதிர்காலத்தை சிதைக்கின்றவகையில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன, அத்தோடு என்சார்ந்தும் பல்வேறு தனிப்பட்ட ரீதியிலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, குரோதங்களைத் தீர்த்துக்கொள்கின்ற இடமாக இதனை எவரும் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறிக்கொள்வதோடு. இத்தீர்மானம் குறித்த எனது இறுதி முடிவை விரைவில் அறிவிப்பேன், அதற்கான நியாயாதிக்கங்களையும் தெளிவுபடுத்துவேன். அதுவரை வீணான தர்க்கங்களிலிருந்து தவிர்ந்துகொள்வது சிறப்பானது எனத் தாழ்மையோடு அனைத்து அன்பர்களையும் நண்பர்களையும் வேண்டி நிற்கின்றேன்". அ.அஸ்மின்- 9-5-2017

    ReplyDelete
  8. கதிரை ஆசை என்பது பொல்லாதது

    ReplyDelete

Powered by Blogger.