Header Ads



மிக சுவாரசிய அரசியல் கலந்துரையாடல் - வயிற்றைப்பிடித்துக் கொண்டு சிரித்த அமைச்சர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசவிற்கு ஆளும் கட்சியின் மற்றுமொரு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்த கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் சந்திப்பு ஆரம்பமாக முன்னதாக இடம்பெற்ற சம்பாசனையின் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர மற்றும் லக்ஸ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் பங்கேற்றியுள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பு ஆரம்பிக்கப்பட முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சக அமைச்சர்களிடம் கூறிய விடயங்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

குறித்த உரையாடல் காணொளியில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறுகின்றார்,

“இங்கே.. நேற்று நல்ல ஓர் வேலை நடந்தது. நேற்று அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நானும், கபீர் ஹாசீமும், மலிக்கும் பேசிக் கொண்டிருந்தோம்”

பின்னர் அந்த இடத்திற்கு சஜித் வந்தார். நான் சஜித்திற்கு சொன்னேன். நீ ஆற்றிய அந்த உரை சிறப்பாக இருந்தது”

”மச்சான் நீ ஆற்றிய உரையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆற்றியிருந்தால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு சென்றிருக்க மாட்டோமல்லவா? என்றேன். அதனை கேட்ட கபீரும், மலிக்கும் வயிற்றைப்பிடித்துக் கொண்டு சிரித்தார்கள்.

சஜித் கேட்டார் நீ என்ன சொல்கின்றாய்? என. அதற்கு நான் சொன்னேன் தலைவருக்காக அர்ப்பணிப்போம், தலைவரை உயிரைப் பணயம் வைத்து காப்போம் என்றெல்லாம் கூறினாய் அல்லவா?

மச்சான் நீ இதை இரண்டாண்டுகளுக்கு முன்னதாக கூறியிருந்தால் நாம் யூ.என்.பி.யிலிருந்து விலகியிருக்க மாட்டோமல்லவா? என்றேன்.

இதனைக் கேட்ட அவனின் (சஜித்) முகம் சிவந்துவிட்டது அங்கிருந்து சென்றுவிட்டான்” என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக சக அமைச்சர்களிடம் கூறிய விடயங்களே அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.