Header Ads



ஹஜ் முக­வர்­ சிலரின், சுயநலச் செயற்பாடு - முஸ்லிம் திணைக்­க­ளத்திற்கு பல அசௌ­க­ரி­யங்­கள்

-ARA.Fareel-

ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்­த­வர்­களில் 5500 பேருக்கு தமது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கடி­தங்­களை அனுப்­பியும் நேற்­று­வரை 2160 பேரே தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­துள்­ள­தாக அரச ஹஜ் குழு தெரி­விக்­கி­றது.

ஒரு சில ஹஜ் முக­வர்­களும், உப முக­வர்­களும் போலி­யான பெயர் முக­வ­ரி­களில் தக­வல்­களை வழங்கி அதி­க­மான விண்­ணப்­பங்­களைச் சமர்ப்­பித்­துள்­ள­மையே இதற்குக் காரணம். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் 2017 பய­ணத்தை 25 ஆயிரம் ரூபா மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய கட்­ட­ண­மாகச் செலுத்தி உறு­தி­செய்­யு­மாறு விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு அனுப்பி வைத்த கடி­தங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான கடி­தங்கள் வழங்­கப்­பட்ட போலி விலா­சங்கள் கார­ண­மாக திணைக்­க­ளத்­துக்கே திரும்பி வந்­த­டைந்­துள்­ளன.

சில ஹஜ் முக­வர்­களும் உப முக­வர்­களும் தமது சுய­நலன் கருதி, மேற்­கொண்ட இந்­ந­ட­வ­டிக்­கை­யினால் அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் பல அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

இந்­நி­லை­மை­யி­னை­ய­டுத்து ஹஜ் கட­மையை மேற்­கொள்ள விண்­ணப்­பித்­துள்ள மேலும் 1000 விண்­ணப்­ப­தா­ரி­களை விண்­ணப்ப வரி­சைக்­கி­ர­மங்­க­ளின்­படி முஸ்லிம், சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு ஹஜ் பய­ணத்தை உறுதி செய்யும் படி கோரி­யுள்­ளது. பய­ணத்தை உறுதி செய்­ப­வர்­க­ளுக்கு அதற்­கான கடி­தங்­களை அனுப்பி வைக்­கவும் திணைக்­களம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இதே­வேளை இவ்­வ­ருட ஹஜ் விசாவை கட­வுச்­சீட்­டு­களில் பதிவு செய்­வ­தற்­காக கட­வுச்­சீட்­டுகள் முன்­னைய காலங்­களில் போன்று ஹஜ் முக­வர்கள் மூலம் சவூதி தூது­வ­ரா­ல­யத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­மாட்­டாது.

ஹஜ் பய­ணி­களின் கட­வுச்­சீட்­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மூலமே சவூதி தூத­ர­கத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் ஹஜ் குழுவின் தலைவர் தெரி­வித்தார்.

கடந்த வருடம் போன்று தாம் பய­ணிக்கும் ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்யும் உரிமை ஹஜ்ஜாஜிகளுக்கே வழங்கப்படும். ஹஜ்ஜாஜிகள் சிறந்த சேவை வழங்கும், குறைவான கட்டணம் அறிவிடும் ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்து அவர்களூடாக தமது பயண ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

No comments

Powered by Blogger.