Header Ads



கடத்தப்பட்ட சல்மான், கரடியனாற்றில் மீட்பு

வியாழக்கிழமை (4) கடத்தப்பட்ட கம்பளை, கங்கவட்ட வீதியைச் சேர்ந்த மூன்று வயதான   முஹம்மத் சல்மான் என்ற சிறுவன், கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறுகமம் கிராமத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். 

ஊறுகமம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் வைத்தே சுமார் 10:30 மணியளவில் அந்தச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். கம்பளையிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழுவே, அந்த சிறுவனை மீட்டுள்ளதுடன், சந்தேகத்தின்  பேரில், 25 வயதான இளைஞன் கைதுசெய்துள்ளது. இந்நிலையில், கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும், 26 வயதான இளைஞனனி அலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும், 30 வயதான நபரொருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அவர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, கடத்தப்பட்ட சிறுவனை விடுவிப்பதற்காக, 30 இலட்சம் ரூபாய் கப்பம் கோரப்பட்ட விவகாரம் தொடர்பில், அந்த இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாமா முறையான முஹம்மத் அசாம் என்ற இளைஞனே, குறித்த சிறுவனை கடைசியாக அழைத்துச் சென்றுள்ளார் என, தாயார் செய்திருந்த  அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்விளைஞன், பதுளை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்து, வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

உறவினரான இளைஞனிடம், குறித்த பெண், வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் உள்ள, கடையில் பயணியாற்றும் தன்னுடைய கணவனுக்கு பகல் சாப்பாட்டை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் 2:30க்கும் இடைப்பட்ட நேரத்தில் கொடுத்து அனுப்பியுள்ளார். அதன்போது, வீட்டிலிருந்த சிறிய மகனும், அந்த இளைஞனுடன் செல்லவேண்டுமென அடம்பிடித்துள்ளார். ஆகையால், அந்த இளைஞனுடன் சிறிய மகனையும் அந்தப் பெண் அனுப்பிவைத்துள்ளார். எனினும், குறிப்பிட்ட இளைஞன், தன்னுடைய கணவன் இருந்த இடத்துக்குச் செல்லாமல், மகனுடன் தலைமறைவாகிவிட்டார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, சிறுவனை விடுவிப்பதற்காக, அந்த இளைஞன் 30 இலட்சம் ரூபாவை, கப்பமாக கோரினார் என்று, பொலிஸாரிடம் சிறுவனின் வீட்டார் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.