Header Ads



விமல் வீர­வன்­சவின் மிருகக் கொள்­கை - போட்டுதாக்கும் மஹிந்த அமரவீர

ஒரு மனிதன் மிரு­க­மா­வதும் பிரா­ம­ண­னா­வதும் பிறப்பால் அல்ல அவ­னது கொள்­கை­களால் ஆகும். எனவே புண்­ணி­ய­மான போயா தினத்தில் கறுப்­புக்­கொடி போராட்டம் நடத்­து­வது விமல் வீர­வன்­சவின் மிருகக் கொள்­கை­க­ளையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் மஹிந்த அம­ர­வீர இவ்­வா­றா­ன­வர்கள் ஊட­கங்­களின் முன்­னி­லையில் தேசப்­பற்­றா­ளர்­க­ளாக நடிக்­கின்­றார்கள் என்றும்  சாடி­யுள்ளார். 

இது தொடர்­பாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும், கடற்­றொழில் நீரியல் வளத்­துறை அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர மேலும் தெரி­விக்­கையில்

முழு உல­கமே பௌத்த தர்­மத்தை நினைவு கூரும் தினமே வெசாக் தின­மாகும். அனைத்து போயாக்­க­ளையும் விட வெசாக் போயா புனி­த­மா­னது.

அவ்­வா­றா­ன­தொரு புண்­ணிய தினத்தில் கறுப்புக் கொடி­களை பறக்க விடு­மாறு மக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­ததன் மூலம் விமல் வீர­வன்ச எம். பி. பௌத்த தர்­மத்தை அவ­ம­தித்­துள்ளார்.

ஆனால் இவர்கள் ஊட­கங்­களின் முன்­னி­லையில் தேசப்­பற்­றா­ளர்­க­ளா­கவும், பௌத்த தர்­மத்தின் பாது­கா­வ­லர்­க­ளா­க­வுமே நடிக்­கின்­றனர். ஒரு மனிதன் மிரு­க­மா­வதும் பிரா­ம­ண­னா­வதும் பிறப்பால் அல்ல அவ­னது கொள்­கை­க­ளாலே ஆகும். 

எனவே வர­லாற்றில் எவரும் கூறாத கருத்தை விமல் வீர­வன்ச எம்.பி. தெரிவித்துள்ளார். இது பௌத்த தர்மத்தையே அகௌரவப்படுத்தும் செயலாகும். எனவே இது மிருகத்தனமான கொள்கையாகும்  என்றார்.

No comments

Powered by Blogger.