Header Ads



நீரிலும், நிலத்திலும் துருப்புக்காவிகள் - தென்னிலங்கையில் புதிய அனுபவம்


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் இராணுவத்தினரின் துருப்புக்காவி கவச வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிக ஆழமற்ற நீர்ப் பகுதிகளிலும் பயணம் செய்யக் கூடிய 15  பிரிஆர் மற்றும் டபிள்யூஎம்இசட் துருப்புக் காவி கவச வாகனங்கள் இந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

புலத்சிங்கள பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும், இறந்தவர்களின் உடல்களை ஏற்றிச் செல்வதற்கும் இந்த கவசவாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா துருப்புக்காவி ஒன்றில் நேற்று சென்று கவசவாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.



No comments

Powered by Blogger.