Header Ads



வளர்த்தவரை துரத்தி, துரத்தி கொன்ற மாடு - கொம்பிலும், தலையிலும் மனித இரத்தம்

சிலாபம் இலிப்­ப­தெ­னிய பிர­தேச  தென்னந்தோட்டம் ஒன்றின் மாட்டு வண்­டியில் கட்­டப்­படும் மாடு ஒன்று அந்த தோட்­டத்தின் காவ­லா­ளியை விரட்டிச் சென்று குத்தி தோட்­டத்­தி­னுள்­ளேயே அவர் உயி­ரி­ழந்து கிடந்த நிலையில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை மாலை அவ­ரது சட­லத்தை மீட்­டுள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

அந்த தோட்­டத்தின் காவ­லா­ளி­யாகப் பணி­யாற்­றிய ஹெட்­டிப்­பொல கஹ­ட­வில பிர­தே­சத்தைச் சேர்ந்த ஏ. எம். ஜய­வர்­தன (63) என்ற மூன்று பிள்­ளை­களின் தந்தை ஒரு­வரே இவ்­வாறு மாடு முட்டி உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

உயி­ரி­ழந்த நபர் குறித்த தோட்­டத்தில் பணி­யாற்­று­வ­தோடு அவரைக் குத்திக் கொன்ற மாடு அவ­ரா­லேயே வளர்க்­கப்­பட்டு அவ­ரா­லேயே வண்­டியில் பூட்டப்பட்டு பயன்­ப­டுத்­து­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் மாலை திடீ­ரென கடும் மழை பெய்யத் தொடங்­கி­யதால் உயி­ரி­ழந்­தவர் தோட்­டத்தில் மேய்ந்து கொண்­டி­ருந்த மாட்டை மடு­வத்தில் கட்­டு­வ­தற்­காகச் சென்று மாட்டை பிடித்து கயிற்­றினால் இழுத்துக் கொண்டு வரும் போது கோப­முற்ற மாடு காவ­லா­ளியை பாய்ந்து குத்த ஆரம்­பித்­துள்­ளது.  

இதனால் மாட்­டி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்­காக காவ­லாளி ஓடிய போதும்  துரத்திச் சென்ற மாடு அவரை நிலத்தில் வீழ்த்தி கொம்பினால் குத்தி கொலை செய்­துள்­ளமை தெரிய வந்­துள்­ள­தா­கவும்  மாட்டின் கொம்­பிலும்  தலை­யிலும் மனித இரத்தம் காணப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

காவ­லாளி உயி­ரி­ழந்த பின்னர் மாடு வழமை நிலைக்கு திரும்­பி­யுள்­ள­தோடு அவ்­வி­டத்­திற்கு வந்த அய­ல­வர்கள் காவ­லா­ளியை உட­ன­டி­யாக சிலாபம் வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்று அனு­ம­தித்த போதிலும் அந்நேரம் அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது. சிலாபம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.